ETF: பயமுறுத்தும் வெள்ளி விலை சரிவு.. வெளியான பரபர ரிப்போர்ட்..!

தங்கத்திற்கு அடுத்து உலகம் முழுவதும் மக்கள் அதிகம் முதலீடு செய்யும் உலோகம் என்றால் வெள்ளி மட்டுமே, ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று வெள்ளிக்கு மிகவும் மோசமான நாள் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று ரீடைல் சந்தையில் வெள்ளி விலை கிலோவுக்கு 5000 ரூபாய் குறைந்து 1,90,000 ரூபாயாகக் குறைந்துள்ளது, இதேபோல் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை கிட்டத்தட்ட 4.2 சதவீதம் வரையில் குறைந்து வெறும் 46.65 டாலராக உள்ளது.

ETF: பயமுறுத்தும் வெள்ளி விலை சரிவு.. வெளியான பரபர ரிப்போர்ட்..!

இதேவேளையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் உலோகமாக வாங்குவதைத் தவிர்த்து டிஜிட்டல் முறையில் வெள்ளி மீது முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்ட ஈடிஎப்-ம் இன்று 5 சதவீதம் வரையில் சரிந்த காரணத்தால் வெள்ளி முதலீட்டாளர்கள் அனைவரும் ஆடிப்போயினர்.

இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் டாடா சில்வர் ஈடிஎப் 4.77 சதவீதமும், நிப்பான் இந்தியா சில்வர் ஈடிஎப் 4.83 சதவீதமும், Groww சில்வர் ஈடிஎப் 4.72 சதவீதமும் சரிவைச் சந்தித்தன. இதேபோல் ஹெச்டிஎப்சி சில்வர் ஈடிஎப் 4.90 சதவீதமும், ஏஞ்சல் ஓன் சில்வர் ஈடிஎப் 4.71 சதவீதமும், கோட்டாக் சில்வர் ஈடிஎப் 4.85 சதவீதமும் சரிந்தன.

Also Read

அதை தொடர்ந்து ஜெரோதா சில்வர் ஈடிஎப் 4.60 சதவீதமும், ஐசிஐசிஐ Prudential சில்வர் ஈடிஎப் 4.61 சதவீதமும், எஸ்பிஐ சில்வர் ஈடிஎப் 4.78 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. ஆதித்யா பிர்லா சன் லைப் சில்வர் ஈடிஎப் 5.12 சதவீதம் சரிந்து அதிகபட்ச வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

மேலும் DSP சில்வர் ஈடிஎப் 4.67 சதவீதமும், ஆக்சிஸ் சில்வர் ஈடிஎப் 4.59 சதவீதமும், யூடிஐ சில்வர் ஈடிஎப் 4.49 சதவீதமும் சரிவைக் கண்டன.

Recommended For You

இந்த மோசமான சரிவுக்கு முக்கிய காரணம் 2026ஆம் ஆண்டில் உலகளவில் வெள்ளி நுகர்வு 5 சதவீதம் வரையில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது, வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படும் சோலார் செல்-களில் வெள்ளி பயன்பாடு குறைந்துள்ளது, குறிப்பாகச் சீனாவின் சோலார் உற்பத்தி அளவு 3 சதவீதம் வரையில் சரியும் எனவும் சில்வர் இன்ஸ்டியூட் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.

இதேபோல் தங்கம் விலை அதிகமான காரணத்தால் வெள்ளி நகைகளை வாங்குவதற்குத் தயாரான மக்கள் தங்கம் விலை சரியத் துவங்கிய காரணத்தால் வெள்ளி நகைகளை வாங்குவதை மொத்தமாக நிறுத்தியுள்ளனர்.

மேலும் தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலை வேகமாக சரிய துவங்கியதன் வாயிலாக வெள்ளியை உலோகமாக வாங்குவோரும் பின் வாங்கியுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் வெள்ளி மீதான முதலீடு என்பது குறைய துவங்கியதன் வெளிப்பாடே இந்த ரிப்போர்ட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+