தகிடுதத்தம்..UAE-ல் இருந்து வெள்ளி இறக்குமதி 60 மடங்கு உயர்வு.. வெள்ளி துகள்கள் மூலம் ஏமாற்றுவேலை..?!

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகம் வெறும் நகைகளுக்காக மட்டுமே பயன்படுத்துவது கிடையாது, பல தொழிற்துறையில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் வெள்ளி இறக்குமதியில் எப்போதுமில்லாத வகையில் முக்கிய மாற்றம் நடந்துள்ளது, இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெள்ளி கடந்த நிதியாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிட்டத்தட்ட 60 மடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளி இறக்குமதி அதிகரிக்க என்ன காரணம்..? குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி அதிகரிக்க என்ன காரணம்..?

தகிடுதத்தம்..UAE-ல் இருந்து வெள்ளி இறக்குமதி 60 மடங்கு உயர்வு..வெள்ளி துகள்கள் மூலம் ஏமாற்றுவேலை..?!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருந்து வெள்ளி இறக்குமதி தடாலடியாக 60 மடங்கு உயர்வது அசாதாரண விஷயம் ஏனென்றால் UAE வெள்ளி உற்பத்தி செய்யாத நாடு, அப்படியிருக்கும் போது UAE-யில் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது.

மே 2022 இல் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே செயல்படுத்தப்பட்ட ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தின் (FTA) மூலம் வரி சலுகை பெறும் முயற்சியில் UAE-யில் இருந்து இந்தியாவுக்கு அதிகப்படியான வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த இறக்குமதியில் வரையறுக்கப்பட்ட அடிப்படை விதி (rules of origin) மீறப்பட்டுள்ளதாகச் சந்தேகத்தை எழுப்பியுள்ளது GTRI அமைப்பு.

Global Trade Research Initiative (GTRI) என்ற திங்க் டேங்க் நிறுவனம் முன்னாள் வர்த்தக அதிகாரி அஜய் ஸ்ரீவஸ்தவா தலைமையில் இயங்கி வருகிறது, இந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெள்ளி இறக்குமதி 5,853 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 நிதியாண்டில் 29.2 மில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, 2024 நிதியாண்டில் 1.74 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்தியிலான ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளிக்கு இந்திய அரசு 8 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளிக்கு 15 சதவீதம் மிகவும் வரி விதிக்கப்படுகிறது.

ஆனால், இவ்வகையான வர்த்தகம் சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெள்ளி உற்பத்தி செய்யாத ஒரு நாடு. அப்படியிருக்கும் போது வெள்ளி வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் வெள்ளி கட்டிகளைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி, வெள்ளி துகள்களாக மாற்றுகிறது.

இதுபோன்ற செயல்பாட்டில் மதிப்பு கூட்டுதல் என்பது மிகக் குறைவே (1 சதவீதத்திற்கும் குறைவு). ஆனால், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தின் அடிப்படை விதி (rules of origin) களை பூர்த்தி செய்ய வெள்ளி வியாபாரிகள் வெள்ளி துகள்களுக்கு 3 சதவீத மதிப்பு கூட்டுதல் இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் ஏற்றுமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்குகின்றனர் என்று அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இத்தகைய முறைகேடான இறக்குமதியை அதிகரிப்பைக் கண்காணிக்க ஒரு வலுவான கண்காணிப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று GTRI வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், விரைவான கொள்கை நடவடிக்கைகள் எடுக்கவும், துபாயில் இருந்து வரும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உலோகத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தங்கம், வெள்ளி மற்றும் ஆபரணங்கள் மீது இறக்குமதி வரிகள் 15 சதவிகிதம் என்பது தான் இத்தகைய பிரச்சனையின் அடிநாதமாக உள்ளது. பெரிய அளவிலான கடத்தல் மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் வரியை 5 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று GTRI திங்க் டேங்க் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல் GTRI திங்க் டேங்க் குழு வெள்ளி இறக்குமதி செய்யப்பட்ட மதிப்பை அடிப்படையாகக் கணக்கிட்டு உள்ளது. வெள்ளி விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேளையில், எடை அடிப்படையில் கணக்கிடுவது தான் சரியாக இருக்கும்.

இதேபோல் இந்தியாவில் விலை உயர்ந்த உலோகத்தின் கடத்தல் அதிகமாகி வருகிறது உண்மை தான், ஆனால் இந்தியாவுக்கு முறையாக இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த உலோகத்தில் பெரும் பகுதி தொழிற்துறை உற்பத்திக்காகச் செல்கிறது. உதாரணமாக வெள்ளி சோலார் பேனல் உற்பத்திக்கும், பிளாட்டினம் ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+