யாரும் சீண்டாத வெள்ளி.. 40 சதவீதம் விலை குறைந்தும் வாங்குவதற்கு ஆள்ளில்லை!

தங்கத்தை விட முக்கியமாக முதலீட்டு சொத்தாக பார்க்கப்பட்ட வெள்ளியை இன்று யாரும் சீண்டுவது கூட இல்லை என வெள்ளி வர்த்தகர்கள் புலம்பி வருகின்றனர். ஈரான் போருக்கு முன்பு தங்கத்தை காட்டிலும் வெள்ளியில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்தனர், இதனால் வெள்ளி விலை 1 கிலோ 4.15 லட்சம் வரையில் உயர்ந்தது.

இந்த அதிரடியான உயர்வுக்கு பின்னால் தொழிற்துறையிலும், சீனா சந்தையிலும் உருவான அதிகப்படியான டிமாண்டும் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் ஈரான் போருக்கு பின்பு மொத்த கதையும் தலைகீழாக மாறியது.

யாரும் சீண்டாத வெள்ளி.. 40 சதவீதம் விலை குறைந்தும் வாங்குவதற்கு ஆள்ளில்லை!

வெள்ளி விலை அதன் உச்ச விலையில் இருந்து சுமார் 40 சதவீதம் வரையில் குறைந்திருக்கும் வேளையிலும் மக்கள் வெள்ளியை வாங்க மறுத்து வருகின்றனர் என வெள்ளி சுத்திகரிப்பாளர்களும், வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு வெள்ளி பார்கள், மொத்த விற்பனை சந்தையில் மட்டும் அல்லாமல் வெள்ளி காசு, ஈடிஎப், பியூச்சர்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் எதிரொலிக்கிறது.

ஒருப்பக்கம் பொருளாதார மந்த நிலையில், நுகர்வு அளவில் ஏற்பட்ட தொய்வு தொழிற்துறையில் வெள்ளிக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதோடு வெள்ளி உலோகத்தின் முக்கிய பயன்பாட்டு துறையாக இருக்கும் சோலார் பேனல் உற்பத்தி பிரிவிலும் டிமாண்ட் குறைந்துள்ளது.

இந்தியாவில் சோலார் உற்பத்திக்கான தளம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்தாலும், அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தேவையான சேமிப்பு தளம், கிரிட் சிஸ்டம் இல்லாத காரணத்தால் இத்துறையின் வளர்ச்சி இந்தியாவில் தேக்க நிலையை அடைந்துள்ளது.

அடுத்தப்படியாக மக்கள் மத்தியில் வெள்ளிக்கான டிமாண்ட் குறைந்துள்ளது, தங்கம் விலை அதிகரிக்கும் காரணத்தால் அதை அடகு வைத்து கடன் வாங்க முடியும் என்ற ஐடியாவை நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தற்போது பாலோ செய்ய துவங்கியதால் ரீடைல் சந்தையிலும் வெள்ளிக்கான டிமாண்ட் குறைந்துள்ளது.

இப்படி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வெள்ளிக்கான டிமாண்ட் இல்லாத நிலையில் ஈரான் போர் முடிந்தால் மட்டுமே ஒரு அவுன்ஸ் வெள்ளி 100 டாலர் எட்டும் அதுவரையில் வாய்ப்பில்லை என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெள்ளி தற்போது யாரும் சீண்டாத சொத்தாக மாறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7000 டன் அளவிலான வெள்ளி இறக்குமதி செய்யப்படும் வேளையில் தற்போது 2000 டன் அளவிலான தங்கம் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+