தங்கத்துக்குப் பிறகு, இந்திய மக்கள் அதிகம் விரும்பும் உலோகங்களில் ஒன்று வெள்ளி (Silver).
சமீபத்தில் தங்கத்தோடு, வெள்ளி விலையும் தாறுமாறாக ஏற்றம் கண்டது. ஆனால் இப்போது வெள்ளி விலை ஒரு மிகப் பெரிய விலையைக் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. நல்ல விஷயம் என்ன என்றால், மீண்டும் வெள்ளி விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.
எம் சி எக்ஸ் வெள்ளி விலை நிலவரம் என்ன? ஆபரண வெள்ளி விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டதா? வாருங்கள் பார்ப்போம்.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில், இன்று ஒரு கிராம் ஆபரண வெள்ளி விலை 610 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி விலை சென்னையில் 61,000 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. கடந்த 24 செப் 2020 அன்று 57,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
15,510 ரூபாய் விலை சரிவு
ஆபரண வெள்ளி விலை கடந்த 07 ஆக 2020 அன்று ஒரு கிலோ 76,510 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த உச்ச விலையை தற்போதைய 61,000 ரூபாய் விலை உடன் ஒப்பிட்டால் 15,510 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. ஆபரண வெள்ளியின் குறைந்த விலையான 57,000 ரூபாயை, தற்போதைய 61,000 ரூபாயுடன் ஒப்பிட்டால், 4,000 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.
எம் சி எக்ஸ் வெள்ளி விலை - டிசம்பர் 2020 காண்டிராக்ட்
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 61,020 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் விலையான 62,466 ரூபாயில் இருந்து 1,446 ரூபாய் (-2.31 %) விலை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
23,703 ரூபாய் விலை வீழ்ச்சி
எம் சி எக்ஸ் வெள்ளி விலை, கடந்த ஆகஸ்டில் 79,723 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. எம் சி எக்ஸ் வெள்ளி, கடந்த 24 செப் 2020 அன்று வர்த்தகமான 56,020 ரூபாயைத் தொட்டு வர்த்தமானது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் விலை உச்சத்துடன், இந்த 56,020 ரூபாயை ஒப்பிட்டால் 23,703 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. கிட்டத்தட்ட வெள்ளி விலை படு பாதாளத்தைத் தொட்டு இருக்கிறது.
5,000 ரூபாய் வெள்ளி விலை ஏற்றம்
24 செப் 2020 விலை உடன், இன்றறைய விலையான 61,020 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 5,000 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக வெள்ளி விலை, தன் 23,703 ரூபாய் வீழ்ச்சியில் இருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கி இருக்கிறது எம் சி எக்ஸ் வெள்ளி.
இன்றைய தங்கம் விலை என்ன
இன்று நம் சிங்காரச் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,730 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,340 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை தங்கத்தோடு சேர்ந்து, மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது.
More From GoodReturns

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications