ராட்சசனாக மாறும் வெள்ளி விலை.. 3 லட்சம் தொடப்போகுதா..? உண்மை என்ன..?

தங்கத்தை ஒருப்பக்கம் மத்திய வங்கி போட்டிப்போட்டு வாங்கி வருவது மட்டும் அல்லாமல் வாங்கிய கையோடு லண்டன் கஜானாவில் வைக்காமல் சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் வழக்கம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக டாலர் நம்பி வர்த்தகம் செய்யும் நாடுகள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது, குறிப்பாக சீனா.

மறுபக்கம் தங்கம் விலை தற்போது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கும் காரணத்தால் வெள்ளியில் முதலீடு செய்து வந்தனர். ஆனால் வெள்ளி விலையும் தினமும் சராசரியாக 3000 ரூபாய் உயர்ந்து கடந்த வாரத்தில் பெரும் சோகத்தை மக்களுக்கு கொடுத்தது.

ராட்சசனாக மாறும் வெள்ளி விலை.. 3 லட்சம் தொடப்போகுதா..? உண்மை என்ன..?

இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதி 2,75,000 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படும் 1 கிலோ வெள்ளி விலை 3 லட்சத்தை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி எட்டினால் எப்போது எட்டும்..? இதற்காக சிக்னல் என்ன..?

இந்த வார வர்த்தக முடிவில் COMEX சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு 79.341 டாலராக முடிந்தது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு 11.27 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. கடந்த வார இறுதியில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 71.300 டாலராக இருந்தது இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இந்திய MCX சந்தையில் மார்ச் 2026 ஒப்பந்தத்திற்கான வெள்ளி விலை கிலோவுக்கு 2,52,000 ரூபாய் விலையில் முடிந்துள்ளது.

அமெரிக்க டாலர் வீழ்ச்சியால் வெள்ளி உயர்வு
இந்த வாரத்தின் துவக்கத்தில் அமெரிக்க டாலர் வலுவாக இருந்த காரணத்தால் வெள்ளி விலை சரிந்து காணப்பட்டது. ஆனால் வார இறுதியில் முதலீட்டாளர்கள் டாலர் முதலீட்டை லாபம் பார்க்க முடிவு செய்த காரணத்தால் டாலர் மதிப்பு சரிந்தது. இதனால் வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களின் விலை உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் வெள்ளி விலை 5.59 சதவீதம் உயர்வு பதிவானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள்
காமாடிட்டி சந்தை நிபுணர்களின்படி, வெள்ளி விலை தற்போது உயர்வு போக்கில் உள்ளதற்கு சப்ளை-டிமாண்ட் மத்தியில் ஏற்றபட்ட மாற்றமே காரணம் என விளக்குகின்றனர். பெரு மற்றும் சாட் நாடுகளில் இருந்து வெள்ளி ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா-வெனிசுலா மத்தியிலான பிரச்சனை தீவிரமடைந்து முக்கிய காரணமாக உள்ளது.

மேலும், சீனா ஜனவரி 1, 2026 முதல் வெள்ளி ஏற்றுமதிக்கு மறைமுக தடை விதித்துள்ளது. இதேநேரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள், லோசார் மின்சார திட்டங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. இதனாஸ் சந்தையில் உருவாகியிருக்கும் டிமாண்ட்-க்கு சப்ளை இல்லாமல் உள்ளது. விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

100 டாலர் மற்றும் 3 லட்சம் இலக்கு
வெள்ளி விலை ஜனவரி 7ஆம் தேதி 82.37 டாலர் என்ற வரலாறு சாதனை உச்சத்திலிருந்து சற்று குறைந்த பிறகு மீண்டும் வலுவடைந்து வருகிறது. இந்த விலை 100 டாலர் வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வேளையில், MCX சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 3 லட்சம் ரூபாய் வரை செல்லும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் சந்தை நிபுணர்கள், இந்த உயர்வு நீண்ட காலம் நீடிக்காது என்றும், விரைவில் உச்சத்தை எட்டி சரியக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

பேஸ் 360 நிறுவனத்தின் அமித் கோயல் கூறுகையில், பிப்ரவரி இறுதிக்குள் வெள்ளி விலை இந்த உச்சத்தை தொடலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் COMEX-ல் வெள்ளிக்கு 70 டாலர் என்ற முக்கிய ஆதரவு நிலை உள்ளது, இதை மீறி கீழே இறங்கினால் பெரிய சரிவு வரலாம்.

இதேபோல் 100 டாலரை தொட வேண்டும் என்றால் 2 முக்கிய நிலையை அடைந்து நிலைபெற்று இருக்க வேண்டும், அதாவது 84 டாலர் மற்றும் 90 டாலர் என்ற முக்கிய நிலையை அடைய வேண்டும். இவற்றை தாண்டினால் மட்டுமே 100 டாலர் சாத்தியம்.

இதேபோல் MCX சந்தையில் 3 லட்சம் அளவீட்டை எட்ட வேண்டும் என்றால் வெள்ளி விலை 2 ஆதரவு நிலையை கடக்க வேண்டும் 2,65,000 ரூபாய் மற்றும் 2,90,000 ரூபாய் ஆகிய நிலைகளை தொட்டு அதன் பின் நிலையாக இருக்க வேண்டும். இவற்றை கடந்தால் அடுத்த ஒன்றரை மாதங்களில் 3 லட்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சந்தையில் தற்போது இருக்கும் டிமாண்ட் அதிகரிக்க வேண்டும், அதேபோல் சப்ளையில் தற்போது இருக்கும் பிரச்சனை தொடர்ந்தால் மட்டுமே டிமாண்ட் - சப்ளை பிரச்சனை மூலம் வெள்ளி விலை உயரும்.

முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
தற்போது வெள்ளி விலை உயர்வு போக்கில் இருந்தாலும், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகளை கவனமாக கண்காணிப்பது அவசியம். விலை உச்சத்தை எட்டிய பிறகு சரிவு வர வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் முடிவெடுப்பது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+