தங்கத்தை விட்டுத்தள்ளுங்க.. வெள்ளி விலையை பாருங்க, ஷாக் மேல ஷாக்..!!

இந்திய மக்கள் தங்கத்திற்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பி வாங்கும் ஒரு காஸ்ட்லியான உலோகம் என்றால் அது வெள்ளி தான், இந்த நிலையில் தொழில்துறையில் வெள்ளி உலோகத்தின் தேவை அதிகரிப்பு, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் குறைப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக வெள்ளி விலையில் வரலாற்றுச் சாதனை உயர்வை எட்டியது.

வெள்ளி விலை வியாழக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையில் வரலாற்றுச் சாதனை உயர்வை எட்டியுள்ளது, ஒரு கிலோவுக்கு ரூ.90,000 நெருங்கிச் சென்றுள்ளது. வெள்ளி விலை ரீடைல் சந்தையில் பல மாதங்களுக்கு முன்பே 90000 ரூபாய் அளவீட்டைத் தாண்டினாலும் சர்வதேசச் சந்தையின் பாதையில் இயங்கும் எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை 90000 ரூபாயை நெருங்கி சாதனை அளவீட்டைத் தொட்டு உள்ளது இதுவே முதல் முறை.

தங்கத்தை விட்டுத்தள்ளுங்க.. வெள்ளி விலையை பாருங்க, ஷாக் மேல ஷாக்..!!

நேற்று ஒரு நாளில் மட்டும் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 4 சதவீதம் கிட்டத்தட்ட 2000 ரூபாய் உயர்ந்துள்ளது, இது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் வெள்ளி விலை சுமார் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி விலை 87,542 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து வெள்ளி உலோகத்திற்கான தேவை அதிகரிப்பதும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் விரைவில் கொள்கை விகிதங்களைக் குறைக்கும் வாய்ப்புகள் தான் இன்றைய விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

வெள்ளி விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் மும்பையில் உள்ள பிரபல நகை பகுதியான ஜவஹர் பஜாரில் மக்கள் வெள்ளி பார், காயின், மற்றும் வெள்ளி வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து பணமாகப் பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளதாக இப்பகுதியில் வர்த்தகம் செய்யும் ரித்திசித்தி புல்லியன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்தார்.

வெள்ளி இறக்குமதி: 2023-24 நிதிய ஆண்டில் வெள்ளி இறக்குமதி சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து 1,561.8 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது, இது 2022-23 நிதிய ஆண்டில் 1,173.89 மெட்ரிக் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில்துறை கொள்முதல் அதிகரிப்பு மற்றும் நிலையான விலைகள் காரணமாக 2023-24 நிதிய ஆண்டில் வெள்ளி தேவை அதிகரித்தது.

ஏப்ரல் மாதத்திலும் வெள்ளி இறக்குமதி தொடர்ந்தாலும், முந்தைய மாதத்தை விட சற்று குறைவாகவே இருந்தது வருகிறது.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, உயர் மதிப்புப் பொருட்களின் கொள்முதலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், வெள்ளி இறக்குமதியும் விற்பனையும் மந்தமாக இருப்பது இயல்பானது என்றும் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்தார்.

உலகளவில் வெள்ளி நகைகளுக்கான தேவை 6 சதவீதம் வரை விரிவடையும் என லண்டனை சேர்ந்த Silver Institute and Metals Focus கணித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளி நகைகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+