இந்தியாவில் பெரும்பாலான மக்களின் முக்கிய முதலீட்டாகவும், சேமிப்பாகவும் இருந்தது, இருப்பதும், இருக்கப்போது தங்கமும், வெள்ளியும் தான். ஆனால் இதன் விலையில் ஏற்படும் அதிரடி உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. குறிப்பாக எளிய மக்களின் தங்கம் என வர்ணிக்கப்பட்ட வெள்ளி கடந்த 3 நாட்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை ஒரு கிலோ வெள்ளி விலை 9000 ரூபாயும், செவ்வாய்க்கிழமை 5000 ரூபாயும், புதன்கிழமை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 12000 ரூபாயும் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன் மூலம் ஜனவரி மாதம் முதல் 7 நாளில் மட்டும் வெள்ளி விலை 210000 ரூபாய் உயர்ந்து சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 12000 ரூபாய் உயர்ந்து 2,53,100 ரூபாயாக உள்ளது. டிசம்பர் மாதம் அதிகப்படியாக 2,85,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் உச்ச விலைக்கு 32000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. இதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் மத்தியில் வெள்ளி விலை மீண்டும் அதன் உச்ச விலையை அடையுமான என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதேவேளையில் புதிதாக வாங்குபவர்கள் வெள்ளி விலை குறையாதா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தங்கம், வெள்ளி விலையில் கடந்த 3 நாட்களாக உயர்வதற்கு முக்கியமான காரணம் அமெரிக்கா வெனிசுலா பிரச்சனை. ஆனால் தற்போது இந்த பிரச்சனை தனிந்திருக்கும் காரணத்தாலும், வெனிசுலா அமெரிக்கா மீது எதிர் தாக்குதல் நடத்தாது என்பது உறுதியான நிலையில் வெனிசுலா பங்குச்சந்தை ஒரு நாளில் 50 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதனால் பாதுகாப்பான முதலீடாக கருத்தப்படும் தங்கம், வெள்ளியின் தேவை சர்வதேச சந்தையில் குறைந்து வருவது ஸ்பாட் சந்தையின் விலை மற்றும் பியூச்சர்ஸ் சந்தை விலை சரிவின் மூலம் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், ஜனவரி 7ஆம் தேதி புதன்கிழமை COMEX சந்தையில் தொடக்கத்திலேயே இதன் விலை ஒரு அவுன்ஸுக்கு 82.548 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இது வெள்ளியின் வரலாற்று உச்சமாகும். ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் 79 டாலராக குறைந்துள்ளது.
இதேபோல எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளி விலை 1.55 சதவீதம் சரிந்து ஒரு கிலோ 2,54,800 ரூபாயாக உள்ளது. இதன் எதிரொலி ரீடைல் சந்தையில் மாலை வர்த்தகத்திலோ அல்லது நாளை காலை வர்த்தகத்திலோ எதிரொலிக்கும்.
மேலும் COMEX சந்தையில் வெள்ளி விலை $82க்கு மேல் நிலைத்திருந்தால், அது $90 அவுன்ஸை நோக்கி செல்லும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.உலக அளவில் வெள்ளி தேவை அதிகரிப்பதால் இந்த போக்கு தொடர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மியூச்சுவல் ஃபண்ட் அறிக்கையின்படி, வரி விதிப்பு அச்சம், லண்டன்-நியூயார்க் இடையிலான டெலிவரி சிக்கல்கள், வட்டி விகிதங்கள் குறைவு ஆகியவை வெள்ளியை சிறப்பான முதலீடாக மாற்றியுள்ளன. இவை வெள்ளி விலையை உயர்த்தும் முக்கிய காரணங்களாக உள்ளன. அரசியல் பதட்டங்கள் வெள்ளி விலை உயர்வை வேகப்படுத்தும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி கடந்த 10 மாதங்களில் 4819.41 டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவு என்றாலும், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் 2,600 டன்னுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டு உல்ளது. இது இந்தியாவில் வெள்ளிக்கான தேவை வலுவாக உள்ளதை காட்டுகிறது.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!



Click it and Unblock the Notifications