"ரிச் டாட் புவர் டாட்" புத்தகத்தின் ஆசிரியரும் புகழ்பெற்ற முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி வெள்ளி விலா தாறுமாறாக உயரும் என மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026-ல் வெள்ளி ஒரு ட்ராய் அவுன்ஸ் 200 ஆக உயரும் என்று அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள டிவீட் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தற்போது வெள்ளி விலை சர்வதேச சந்சையில் 92 டாலர் அருகே உள்ளது. இந்தியாவில் இதன் மதிப்பு 3,40,000 ரூபாயாக உள்ளது. இப்படியிருக்கும் நிலையில் டாலர் - ரூபாய் மதிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லையெனில் வெள்ளி விலை 200 டாலர் தொடும் போது 6.5 லட்சம் வரை செல்லும். வெள்ளி 6 லட்சம் வரை செல்ல என்ன காரணமாக இருக்கும்..? இதையும் ராபர்ட் கியோசாகி விளக்கியுள்ளார்.

கியோசாகி தனது X பதிவில், "தங்கம் மற்றும் வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பணமாக இருந்து வருகின்றன. ஆனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் வெள்ளி ஒரு பொருளாதார கட்டமைப்பு உலோகமாக உயர்ந்துள்ளது.
உதாரணமாக தொழில்துறை யுகத்தில் அதாவது Industrial Age-ல் இரும்பு எப்படி இருந்ததோ, அதேபோல் இன்று ஏஐ, கிளவுட், டேட்டா சென்டர் என உலகம் AGI யுகத்திற்கு மாறி வரும் வேளையில் வெள்ளி உலக பொருளாதாரத்தின் எதிர்கால கட்டமைப்புக்கான உலோகமாக மாறியுள்ளது" என்று விளக்கியுள்ளார்.
1990-ல் வெள்ளி ஒரு அவுன்ஸ் 5 டாலராக இருந்தது. ஆனால் 2026-ல் 92 டாலராக உயர்ந்துள்ளது. வெள்ளி தற்போது வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வெள்ளி மதிப்பு மேலும் உயரும் என்று அவர் நம்புகிறார்.
மேலும் தனது பதிவில் ராபர்ட் கியோசாகி " வெள்ளி விலை நான் 200 டாலர் வரையில் உயரும் என்று கணித்துள்ளேன். நான் தவறாக கணித்திருக்கலாம் இருக்கலாம். உங்கள் கருத்து என்ன?" என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பதிவு முதலீட்டாளர்கள் மற்றும் வெள்ளியில் பெரும் தொகையை முதலீடு செய்தவர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.
ராபர்ட் கியோசாகி தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பான முதலீடுகளாக பார்க்கிறார். தொழில்நுட்ப யுகத்தில் வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால், அதன் விலை உயரும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கணிப்பு வெள்ளி முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் கிராமுக்கு 235 ரூபாய், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் மட்டுமே சரிந்த வேளையில், ETFகளில் சுமார் 18-20% வரை சரிந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ராபர்ட் கியோசாகி-யின் இந்த பதிவு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராபர்ட் கியோசாகி-யின் கேள்விக்கு உங்க பதில் என்ன..? கமெண்ட் பண்ணுங்க.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications