ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குள் முடிக்க முடியுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

சென்னை: வீட்டுக் கடன்களை வாங்குவது தற்போது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. தங்களுக்கென சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் முதலில் தேர்ந்தெடுப்பது வீட்டு கடன்களைத் தான். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் விளைவாக, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக, வீட்டுக் கடன் EMI-கள் உயர்ந்துள்ளன. இதனால், வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தங்கள் மாத தவணைத் தொகையைக் குறைக்க என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு உதவும் வகையில் வீட்டுக் கடன் EMI தொகையைக் குறைப்பதற்கான சில வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

குறுகிய கடன் காலம்: வீட்டுக் கடன் வட்டியை குறைப்பதற்காக கடனின் காலத்தை முடிந்தவரை குறுகியதாக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கடனின் காலம் நீண்டதாக இருந்தால் அதிக வட்டி கட்ட வேண்டியதாக இருக்கும். உதாரணமாக, ரூ. 50 லட்சம் ரூபாயை கடனாக 9 சதவீத வட்டி விகிதத்தில் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கான மொத்த வட்டியாக ரூ.26 லட்சம் செலுத்தப்பட வேண்டும். இதை 15 வருடங்களாக நீட்டிப்பதன் மூலம் ரூ. 41 லட்சமும், 20 வருடங்களுக்கு ரூ.58 லட்சமும் வட்டியாக செலுத்தப்பட வேண்டும்.

ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குள் முடிக்க முடியுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

அதிகரிக்கும் EMIகளின் முக்கியத்துவம்: சிறிய வீடு கட்டுபவர்களுக்கு இந்த கடனின் காலம் கடினமானதாக இருக்கும். ஏனெனில் அதிக EMI-களை அவர்களால் கட்ட இயலாது. அதுவே நீங்கள் 15-20 ஆண்டுகளுக்கு கடனை பெறுகிறீர்கள் என்றால் உங்கள் வருமானம் உயரும் போது EMI கட்டுவது எளிதான ஒன்றாக இருக்கும். மேலும் சம்பளம் உயரும்போது EMI தொகையை அதிகரித்துக் கொண்டே சென்றால், குறுகிய காலத்திற்குள் கடனை முடிக்க முடியும்.

ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குள் முடிப்பது எப்படி?: ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குள் முடிக்க, ஒவ்வொரு ஆண்டும் EMI தொகையை 5% அதிகரிப்பதன் மூலம் 20 வருட கடனை 8 அல்லது 9 வருடத்திற்குள்ளாகவே முடிக்க முடியும். அதே உங்களால் ஒவ்வொரு வருடத்திற்கும் 10% அதிகரிக்க முடியும் என்றால் 9% வட்டி விகிதத்தில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடனை, வெறும் 10 ஆண்டுகளில் செலுத்தி முடிக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் உங்களின் சம்பளத்தின் அளவு அதிகரிக்கும் என்று நீங்கள் எண்ணினால் முடிந்தவரை EMI தொகையை அதிகரித்து, முன்கூட்டியே கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். முதிர்ச்சி அடைந்த முதலீடுகள், பரிசு,போனஸ் போன்ற பணத்தையும் லோனை அடைக்க உபயோகித்தால் கடனை எளிதில் முடிக்கலாம்.

இன்சூரன்ஸ்: வீட்டுக் கடன் வாங்கும் போது, கடன் வழங்குபவர் வழங்கும் காப்பீட்டு திட்டங்களையும் மதிப்பீடு செய்வது அவசியம். பெரிய தொகை கடனை பெறும் போது, கடன் தீர்ப்பதற்கு முன்பே உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், உங்கள் குடும்பத்தினர் கடன் சுமையைச் சந்திக்க வேண்டியிருக்காது என்பதற்காக, லைப் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நல்லது. கடன் காலத்தில் நீங்கள் கடன் வழங்குபவரை மாற்றி லோன் டிரான்ஸ்பர் செய்தால், இந்தக் காப்பீட்டு திட்டம் முடிவுக்கு வந்துவிடும். எனவே, தனியாக டெர்ம் இன்சூரன்ஸ் வாங்குவது சிறந்தது.

ஜாயிண்ட் லோன்: வரிச் சலுகைகளை அதிகரிக்க கூட்டு வீட்டுக் கடனை நீங்கள் பரிசீலிக்கலாம். வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு அரசு வழங்குகிறது. ஆனால், வீட்டின் விலை உயர்வு காரணமாக, சமீப ஆண்டுகளில் சராசரி கடன் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. 9% வட்டி விகிதத்தில், 20 ஆண்டுகளுக்கான ரூ.50 லட்சம் வீட்டுக் கடனுக்கு, ஆண்டு வட்டி சுமார் ரூ.4.5 லட்சம் இருக்கும். மனைவியும் சம்பாதித்தால், கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக ரூ.2 லட்சம் வீதம் வரிவிலக்கு கோர முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+