பெங்களூரு: தற்போது பலரும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறார்கள் ஆனால் அவர்களில் அனைவருக்குமே வெற்றி கிடைத்து விடுவதில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய விஷயங்களில் சற்று மாற்றி புதுமையான சேவைகளை தரக்கூடிய ஸ்டார்ட் அப்கள் எளிமையாக வெற்றியை பெற்று விடுகின்றன. அப்படி ஒரு நிறுவனம் தான் Skydo .
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் யுபிஐ மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் யுபிஐ மூலம் உள்நாட்டு பரிவர்த்தனையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது ஸ்கைடூ நிறுவனம் மட்டும் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுடனான பண பரிமாற்றத்தை யுபிஐ போல எளிமை படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட தொடங்கியது.

இந்தியாவில் சிறு வணிகங்களுக்கு எல்லாம் எல்லை தாண்டிய பரிவர்த்தனை என்பது பல்வேறு சவால்கள் மிகுந்ததாக இருந்து வந்த நிலையில் அதனை எளிமையாக்கி தந்திருக்கிறது ஸ்கைடூ. ஸ்கைடூ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீவாட்சன் ஸ்ரீதர் குட் ரிட்டர்ன்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் சிறுவயதில் இருந்தே தனக்கு ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பணம் அனுப்புவதை எளிமையாக்க வேண்டும் என்ற ஒரு சிறிய யோசனை தான் தானும் தன் நண்பரும் இணைந்து ஸ்கைடூ என்ற நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தது என கூறுகிறார் . இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வங்கிகளோடு கூட்டணி அமைத்து வருவதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பணம் அனுப்புவது மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புவதும் எளிமையாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.
தங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருமே அண்மையில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் அதாவது பெரும்பாலானவர்கள் ஜென் ஸீ ஊழியர்கள் என கூறுகிறார். பாரம்பரியமான வேலை நடைமுறைகளை கலைந்து இவர்கள் அனைவருமே எந்தவித அச்சமும் இல்லாமல் வெளிப்படையாக பேசி புதிய புதிய யோசனைகளை கொண்டு வருபவர்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த நிறுவனத்தை தொடங்கி அதற்கான நிதி திரட்டுவது பெரிய சவாலாக இருந்ததாக கூறும் அவர் ஸ்கைடூ நிறுவனத்தை உலக அளவிலான B2B பேமென்ட் நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதே தன்னுடைய திட்டம் என கூறுகிறார். அடுத்த பத்து ஆண்டுகளில் இன்ஸ்டன்ட் பேமெண்ட்டுகள், கிரிப்டோ கரன்சிகள், ஸ்டேபிள் காயின்கள் உள்ளிட்டவை பணப்பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறும் அவர் அதற்கேற்ற வகையில் தங்களுடைய நிறுவனத்தை மாற்றி அமைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் தொடங்கி பின்னர் படிப்படியாக உலக சந்தை வரை வளர்ச்சியடைய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார் .சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் ஸ்ரீவாட்சன் ஸ்ரீதர். இவருடைய தந்தையே ஒரு தொழிலதிபர் தான் . எனவே சிறு வயது முதலே ஒரு தொழில் முனைவு என்றால் எப்படி இருக்கும் என்பதை கற்றுக் கொண்டவர். பின்னர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக பெங்களூருவில் செட்டிலான இவர் தற்போது அங்கிருந்து தொழிலதிபராகி இருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications