கடந்த ஒரு வருடத்தில் அதானி சொத்து மதிப்பு மட்டுமே அதிகரிப்பு.. பிறர் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு வருடத்தில் தனது சொத்து மதிப்பை அதிகரித்த ஒரே கோடீஸ்வரர் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மட்டுமே என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவை இலக்காக வைத்தே ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

இதற்கு ஏழை, நடுத்தர மக்கள், கோடீஸ்வரர்கள் என யாரும் விதிவிலக்கு கிடையாது.

அதானி-யின் மாஸ்டர் பிளான்.. Air Works நிறுவனத்தைக் கைப்பற்றி ஏர் இந்தியா-வுக்கு டார்கெட்..! அதானி-யின் மாஸ்டர் பிளான்.. Air Works நிறுவனத்தைக் கைப்பற்றி ஏர் இந்தியா-வுக்கு டார்கெட்..!

உலகம்

உலகம்

கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் மிக வேகமாக மீண்டு வந்தாலும், ரஷ்யா - உக்ரெய்ன் இடையிலான போர் காரணமாகவும், பணவீக்கம் காரணமாகவும் உலக கோடீஸ்வரர்கள் தங்களது செல்வ மதிப்பில் சரிவை சந்தித்துள்ளதாகக் கடந்த ஒரு ஆண்டின் தரவுகள் கூறுகின்றன.

விதிவிலக்கு

விதிவிலக்கு

சென்ற ஆண்டு தீபாவளி முதல் இந்த ஆண்டு தீபாவளி முதல் உலக கோடீஸ்வரர்கள் முதல் இந்திய கோடீஸ்வரர்கள் என பலரது செல்வ மதிப்பு சரிந்துள்ளன. ஆனால் அதில் ஒருவருக்கு மட்டும் அதிர்ஷ்டம் என கூறலாம்.

கவுதம் அதானி

கவுதம் அதானி

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்தவர் கவுதம் அதானி. இந்திய பிரதமர் மோடியின் நண்பர் இவர் என்பதாலே 2014 பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதானிக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி எந்த உலக நாடுகள் சுற்றுலா சென்றாலும் அங்கு நடைபெறு வணிக ஒப்பந்தங்களில் அதனிக்கு உதவி செய்து வருகிறார் என எதிர்க்கட்சிகள் பெரும் அளவில் குற்றம்சாட்டி வருகின்றன.

அதிகரித்த செல்வ மதிப்பு

அதிகரித்த செல்வ மதிப்பு

இந்நிலையில் அதனை மேலும் உதவி செய்யும் விதமாக கடந்த ஒரு வருடத்தில் தனது சொத்து மதிப்பை அதிகரித்த ஒரே கோடீஸ்வரர் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் அதானியின் சொத்து மதிப்பு 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், இந்தியாவின் மிகப் பெரிய கடன்காரரும் அதானி தான் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

எலன் மஸ்க்

எலன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத் தலைவரும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துபவரான எலன் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் 39 சதவீதம் சரிந்துள்ளது.

ஜெஃப் பிசோஸ்

ஜெஃப் பிசோஸ்

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பிசோஸ் சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டி 28 சதவீதம் சரிந்துள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட்

பெர்னார்ட் அர்னால்ட்

LVMH-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக பெர்னார்ட் அர்னால்ட் செல்வ மதிப்பு சென்ற ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 21 சதவீதம் சரிந்துள்ளது.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர், நீண்ட காலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த பில் கேட்ஸ் செல்வ மதிப்பு 21 சதவீதம் சரிந்துள்ளது. அதற்கு இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து அதற்காக இவர் வழங்கிய ஜீவனாம்சம் போன்றவையும் காரணம் என கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

அதானியின் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வந்த அதே நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் 2020-ம் ஆண்டு முதல் கடன் இல்லா நிறுவனமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற முக்கிய இந்திய கோடீஸ்வரர்கள்

பிற முக்கிய இந்திய கோடீஸ்வரர்கள்

ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாட்டார் செல்வ மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் 17 சதவீதம் சரிந்துள்ளது. விப்ரோ நிறுவனர் அசின் ப்ரேம்ஜி செல்வ மதிப்பு 39 சதவீதம் சரிந்துள்ளது. டீமார்ட் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தாமனி சொத்து மதிப்பு 20 சதவீதம் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: adani அதானி
English summary

Since Last Year Deepavali In Top Billionaire List Adani Only Gained His Wealth

Adani Only Gained His Wealth Since Last Year Deepavali In Top Billionaire List | கடந்த ஒரு வருடத்தில் அதானி சொத்து மதிப்பு மட்டுமே அதிகரிப்பு.. பிறர் நிலை என்ன?
Story first published: Wednesday, October 26, 2022, 23:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X