கோவை மக்களே.. அடுத்த ஒரு மாதத்தில் வேலை ஆரம்பம்.. சிங்காநல்லூர் மேம்பாலம் பணி துவக்கம்..!

ஐடி, டெக்ஸ்டைல், மோட்டார், கனரக தொழிற்துறை என பல துறையில் தொடர்ந்து வேகமாக வளர்ந்துக்கொண்டு இருக்கும் கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாடு மாநில போக்குவரத்து துறை அடுத்த ஒரு மாதத்தில் சிங்காநல்லூர் டூ திருச்சி சாலை வரையிலான 2.4 கிலோமீட்டர் தொலைவிலான 4 வழி மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுக்குறித்து இத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த மாபெரும் திட்டத்திற்கான கான்டிராக்டர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விரைவில் பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை மக்களே.. அடுத்த ஒரு மாதத்தில் வேலை ஆரம்பம்.. சிங்காநல்லூர் மேம்பாலம் பணி துவக்கம்..!

இந்த திட்டத்தில் முக்கியம் அம்சம் என்னவென்றால் சிங்காநல்லூர் ஜங்ஷன் முதல் திருச்சி சாலை வரையிலான 4 வழி மேம்பாலம் அமைக்கப்பட்டு, இருபுறமும் 2 வழி சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இதோடு 1500 சதுர மீட்டர் அளவிலான நிலத்தை வாங்கி அங்கு மேம்பலாத்திற்கு வாகனங்கள் ஏறுவதற்கு ஏதுவான ரேம்ப் அமைக்கப்பட உள்ளது. சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மாபெரும் திட்டத்தை அடுத்த 2 வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் முக்கிய பணி என்னவென்றால் நிலத்தை கையகப்படுத்துவது தான், இதற்கு நேரம் எடுக்கும் காரணத்தால், முதல்கட்டமாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தை அரசு வாங்கிய பின்பு இப்பகுதியை ரேம்ப் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்திட்டம் சுமார் 6 வருடங்களாக கிடப்பில் இருக்கும் வேளையில், நிலத்தை கைப்பற்றிய பின்பு தான் திட்டத்தை துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இதற்கு சமீபத்தில் அமைச்சர்கள் உடன் நடந்த சந்திப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

சிங்காநல்லூர் டூ திருச்சி சாலை என்பது மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் திட்டத்தை துவங்கும் முன்பு முழுமையான உறுதியுடன் துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இத்தகைய கோரிக்கைக்கு முக்கிய காரணம், தேசிய நெடுஞ்சாலை சாய்பாபா காலனி மேம்பாலத்தை முழுமையாக நிலத்தை கைப்பற்றாமல் துவங்கப்பட்டதால் கால தாமதம் மூலம் இப்பகுதியில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர், இதே போன்ற பிரச்சனை சிங்காநல்லூர் பாலத்திற்கும் வர கூடாது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, நிலத்தை கைப்பற்றுவதற்கு முன்பு துவங்கினால் புகார் கொடுக்க வேண்டி வரும் என கோவை வாடிக்கையாளர் நலன் அமைப்பின் செயலாளர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+