இந்தியர்கள் அதிகளவில் வெளிநாட்டுக்கு சென்று பணியாற்ற விரும்பும் வேளையில், பெரும்பாலானோரின் முக்கிய தேர்வு பட்டியலில் சிங்கப்பூர் முக்கிய இடமாக இருக்கிறது. குறிப்பாக தமிழர்களுக்கு சிங்கப்பூரில் நிறுவனத்தில் வேலை கிடைத்தாலோ, சிங்கப்பூர் கல்லூரியில் இடம் கிடைத்தாலோ உடனே செல்ல தயாராகிவிடுவார்கள். காரணம் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் தொகை தமிழர்கள் தான்.
சிங்கப்பூரில் எப்படியாவது வேலை கிடைத்து போக வேண்டும் என திட்டமிட்டு முயற்சித்து வரும் ஒரு பிரிவினருக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. சிங்கப்பூர் முக்கிய முதலீட்டு சந்தையாக இருப்பது மட்டும் அல்லாமல் சுற்றுலா துறையில் சிறந்து விளங்க கூடிய உலக நாடுகளில் ஒன்று.

இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டில் ஹாஸ்பிலாட்டி துறையில் பணியாளர் பற்றாக்குறை உருவாகியிருக்கும் வேளையில், இதை சமாளிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு அனுமதிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு பட்டியலில் இந்திய சமையல்காரர்களையும் சேர்த்து அதன் பணியமர்த்தல் விருப்பங்களை விரிவுபடுத்தியுள்ளது.
இத்தகைய நடவடிக்கை மூலம் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறிப்பிட்ட வேலைவாய்ப்புகளுக்கு உரிய மற்றும் சரியான நபர்களை தேர்வு செய்யும் பணியை எளித்தாக்கும், அதேநேரத்தில் வேகப்படுத்தும். இதன் அடிப்படையில் சிங்கப்பூர் அரசு தனது permissible recruits பிரிவில் இந்திய சமையல்காரர்களை சேர்த்துள்ளது.
பொதுவாக சிங்கப்பூரில் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் தேவைப்படும் ஊழியர்களை சீனா, மலேசியா, ஹாங்காங், மக்காவ், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து தான் பணியில் அமர்த்தும். இந்த முறை இந்திய சமையல்காரர்களுக்கு அதிகப்படியான தேவை உருவாகியிருக்கும் காரணத்தால் permissible recruits பட்டியலில் சேர்த்துள்ளது.

மேலும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் சமீபத்தில் அந்நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் பணிபுரிய சமையல்காரர்களுக்கான விண்ணப்ப சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் பணியாற்ற வொர்க் பர்மீட் வைத்துள்ளவர்களை பணியில் அமர்த்த Non-Traditional Sources (NTS) கீழ செப்டம்பர் 1 முதல் விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில் Non-Traditional Sources (NTS) கீழ் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் உள்ளது. இதன் மூலம், இந்திய சமையல்காரர்களும் இப்போது வீட்டுப் பணியாளர்கள் முதல் உணவகங்கள் வரையில் பணியாற்றும் வாய்ப்பை பெறுவார்கள். குறிப்பாக தமிழ்நாட்டு சமையல்காரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications