உலகின் முன்னணி பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.டி.எல் குழுமம், ஜெர்மனியின் டோமிசில் (Domicil) மற்றும் ஃபாப்ரிக்கா (Fabbrica), இத்தாலி நாட்டின் கொரியம் இத்தாலியா (Corium Italia) ஆகிய உலக பிரபலமான பிராண்டுகளின் பர்னிச்சர்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த முன்னணி பிராண்டுகளின் பர்னிச்சர்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட HTL குரூப் நிறுவனம், தற்போது இந்த பிராண்டுகளை இத்தாலி மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியச் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இறக்குமதியை நிறுத்திவிட்டு சென்னை தொழிற்சாலையில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பது தான் HTL குரூப்-ன் திட்டம்.
2022 ஆம் ஆண்டில் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த ஹெச்.டி.எல் குழுமம், நாட்டின் 32 பில்லியன் டாலர் மதிப்புள்ள பர்னிச்சர் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டு, சென்னை தொழிற்சாலையில் அடுத்தடுத்து முன்னணி பிராண்டு பொருட்களை தயாரிக்க உள்ளது.
"இந்தியாவில் சுமார் 90% பர்னிச்சர் சந்தை வகைப்படுத்தாத சந்தையாக உள்ளது. இந்த சந்தையின் 5% முதல் 10% வரையிலான பங்கை நாங்கள் கைப்பற்ற முடிந்தாலும், அது எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்" என்று சிங்கப்பூர் ஹெச்.டி.எல் குழுமத்தின் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய தலைவரான மனோஜ் நாயர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் ரூ.125 கோடி மதிப்பிலான வருமானத்தைப் பெற்ற ஹெச்.டி.எல் குழுமம், 2024 ஆம் ஆண்டில் 50% முதல் 60% வரையிலான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பிராண்டுகளின் எண்ணிக்கை மற்றும் தயாரிப்பை அதிகரித்து வருகிறது.
"டோமிசில், ஃபாப்ரிக்கா மற்றும் கொரியம் ஆகிய பிராண்டுகளின் தயாரிப்பை இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் தொடங்குவோம். இவற்றில் முதலில் டோமிசில் சோஃபாக்கள் தயாரிக்கப்படும். இந்த பிராண்டுகளை இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலம், விலை குறைப்பு மற்றும் வாடிக்கையாளர்களையும் சந்தையையும் விரைவாகச் சென்றடைவது ஆகிய நன்மைகள் கிடைக்கும்" என்று டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் இந்த மூன்று பிராண்டுகளின் விற்பனை, இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 20% பங்களிப்பு செய்கின்றன. இதை விரிவாக்கம் செய்யவும், லாப அளவீட்டை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஹெச்.டி.எல் குழுமம் இத்தாலி, வியட்நாம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஏழு தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. சென்னையில் உள்ள தொழிற்சாலை தான் இந்தியாவில் உள்ள ஒரே தொழிற்சாலையாகும்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications