இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவை துறை ஏற்கனவே புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வரும் வேளையில், காலாண்டு முடிவுகளில் போராடி லாபகரமாக வெளியிட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறது. இந்திய IT சேவை துறையின் வளர்ச்சியை இத்துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும், புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை வைத்து எளிதாகக் கூறிவிட முடியும்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய ஐடி சேவைத் துறையில் முக்கிய வர்த்தக சந்தையாக இருக்கும் சிங்கப்பூரில் அந்நாட்டு அரசு திறன்மிக்க தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் விசா கட்டமைப்பில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த புதிய மாற்றம் இந்தியாவின் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று இந்திய IT துறை கவலை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஏற்கனவே திறமையான தொழிலாளர்களுக்கு அதிகப்படியான பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த புதிய விசா விதிமுறை வணிகத்தை எளிதாக்குவதில் தடையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள திறன்மிக்க தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் விசா-வில் புதிய புள்ளி அடிப்படையிலான கட்டமைப்பில் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புள்ளிகளைப் பெற இந்தியாவில் எட்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. இதன் மூலம் 8 கல்லூரி பட்டதாரிகளைத் தாண்டி நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமான எடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தற்போதைய ஐடி ஊழியர்கள் கட்டமைப்பைப் பிரதிபலிக்காது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. மேலும், திறமை பற்றாக்குறை உள்ள பணிகளின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பட்டியல் குறித்த விபரம் செய்தியின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் விசா ரினிவல் செய்பவர்கள் புதிய புள்ளிகள் கட்டமைப்பின் கீழ் குறைந்தது 40 புள்ளிகளைப் பெற வேண்டும். அதோடு இந்த தகுதிக்கு இணையான சம்பளத்தையும் பெற வேண்டும். இதன் மூலம் மட்டுமே சிங்கப்பூரில் வேலை செய்யும் அனுமதி அதாவது Employment Pass (EP) கிடைக்கும். சிங்கப்பூர் நாட்டின் இந்த புதிய புள்ளிகள் கட்டமைப்பின் பெயர் Complementarity Assessment Framework (COMPASS).
இதுகுறித்து இந்திய ஐடி துறையின் தலையாய அமைப்பான நாஸ்காமின் துணைத் தலைவர் ஷிவேந்திரா சிங் கூறுகையில், சிங்கப்பூரில் டிஜிட்டல் துறையில் திறமை பற்றாக்குறை இருப்பது நன்கு அறியப்பட்ட ஒன்று. எனவே, சிங்கப்பூர்-க்கு முக்கியமான திறமைகளைக் கொண்டுவர வேண்டியது அவசியம், இதற்கு Employment Pass (EP) விதிமுறையில் கட்டாயம் தளர்வு இருக்க வேண்டும்.
உதாரணமாக, புதிய விதிமுறையின் கீழ், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மும்பை பட்டதாரிகள் 20 புள்ளிகள் பெறலாம். மற்ற ஐந்து IIT கள் மற்றும் IISc இன் குறிப்பிட்ட துறைகளின் பட்டதாரிகள் 10 புள்ளிகள் பெறலாம். இந்த 8 கல்லூரிகளைத் தவிர நாட்டின் அனைத்து பட்டதாரிகளும் ஒரே தராசில் வைக்கப்படுவார்கள்.
ஆனால் இந்திய ஐடி துறை ஐஐடி கல்லூரிகளில் இருந்து சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்க்கிறது, நாட்டின் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து தான் அதிகப்படியான பணியாளர்களை பணியில் நியமிக்கிறது. எனவே, இந்த பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என்றும் நாஸ்காம் உயர் அதிகாரி ஷிவேந்திரா சிங் கூறுகிறார்.
மேலும், புதிய விதிமுறையின்படி, ஒரு நிறுவனத்தில் 5% க்கும் குறைவான ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே 20 புள்ளிகள் பெற முடியும் என தனி கட்டுப்பாடும் உள்ளது.
இந்த நிலையில் நாஸ்காம் வைக்கும் பரிந்துரை என்னவென்றால், சிங்கப்பூரில் திறமை பற்றாக்குறை உள்ள தொழில்களின் பட்டியலில் ஐடி துறை மற்றும் பிற முக்கிய தொழில்துறைகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த பட்டியலில் உள்ள பணிகளுக்கு 20 புள்ளிகள் கூடுதல் போனஸ் கிடைக்கும். இதனால் கல்லூரி அடிப்படையிலான தகுதிகள் பிரச்சனையில் இருந்து இந்தியா விடுபடும்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications