சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதைச் சரி செய்யும் பொருட்டு இளம் தம்பதிகள் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஊக்குவித்தும் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வாழ்க்கை முறை எனப் பல விஷயங்களைப் பேசி வரும் வேளையில், பலரும் மறந்து கைவிடுவது வேகமாகக் குறைந்து வரும் பிறப்பு விகிதம். பிறப்பு விகிதம் குறைந்தாலோ அல்லதும் பணி செய்யும் இளம் தலைமுறையினர் எண்ணிக்கை குறைந்தாலோ ஒரு நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்று விடும்.

தற்போது இந்தப் பிரச்சனையை ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள், ரஷ்யா உட்படப் பல நாடுகள் எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க அரசுகள் மக்களை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளையில் மக்கள் வாழ்வியலை எளிமையாக்குவது மட்டும் அல்லாமல் பல அடிப்படைத் தேவைகளைக் குறைந்த செலவில் அல்லது ஜீரோ கட்டணத்தில் பூர்த்தி செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாகக் கல்வி கட்டணம், மருத்துவச் செலவுகள், உணவு பணவீக்கத்தை அதிகளவில் குறைப்பது வரையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் சிங்கப்பூர் மக்கள் சீனப் புத்தாண்டைப் பிப்ரவரி 10-11 தேதிகளில் கொண்டாடுகிறார்கள், இந்தப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் திங்கட்கிழமை கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சீனப் புத்தாண்டையொட்டி சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்துக்கூறிப் பேசினார்.
இவர் பேசுகையில் இந்த நன்னாளில், விடுமுறையில் இளம் தம்பதிகள் உங்கள் குடும்பத்தில் ஒரு 'குட்டி டிராகனை' சேர்ப்பதற்கான சிறந்த நேரம் இது எனச் சந்திர புத்தாண்டு செய்தியாகப் பிரதமர் பேசியுள்ளார்.
சிங்கப்பூர் போன்ற வளர்ந்த சமூகங்களில் பிறப்பு விகிதத்தில் தொய்வு ஏற்படும் போக்குக் கவனிக்கத்தக்கதாக உள்ளது. உலகளவில் பல நாடுகளில் குறைவான குழந்தைகளே பிறக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் அதன் மிகக் குறைந்த பிறப்பு விகிதமான 1.05 ஐ கண்டது, இது 2020ல் 1.1 மற்றும் 2021 இல் 1.12 அளவீட்டை காட்டிலும் குறைவான அளவீடாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications