சிங்கப்பூரில் சிடிஎல் (CDL) எனப்படும் City Developments Ltd என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருக்கக்கூடிய குவிக் லெங் பெங் தன்னுடைய மகன் நிறுவனத்தில் தனக்கு எதிராக சதி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு இருக்கிறார். மகனுக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
84 வயதாக கூடிய லெங் பெங் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னுடைய மகன் ஷெர்மான், சிடிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பதாகவும் நிறுவன செயல்பாடுகளில் அவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பது தற்போது கண்டறியப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஷெர்மான் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வாரிய குழு இயக்குநர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிடிஎல் நிறுவன செயல்பாடுகளை சீரமைப்பதற்காகவும் அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவனம் செயல்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். சிடிஎல் நிறுவனத்தை பொருத்தவரை லெங் பெங் மற்றும் அவருடைய மகன் ஷெர்வான் ஆகிய இரண்டு பேருடன் மொத்தம் 11 பேர் வாரிய குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் மூன்று பேர் லெங் பெனுக்கு ஆதரவாகவும் 6 பேர் மகன் ஷெர்வானுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
இதில் மகன் ஷெர்வான் மற்ற வாரிய குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து நிறுவன செயல்பாடுகளில் சில முறைகேடுகளில் ஈடுபட்டு நிறுவனத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் சதி செய்திருப்பதாக தந்தை குற்றம் சாட்டுகிறார். இது சட்டத்திற்கு சட்டத்தை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ள அவர் தன்னுடைய மகனே தனக்கு எதிராக சதி செய்வது மிகுந்த அதிருப்தியை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஷெர்மானை தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது என அவருக்கு சாதகமாக செயல்படக்கூடிய வாரிய குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதனால் சிடிஎல் நிறுவனத்தின் எதிர்காலம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் லாபமும் வருமானமும் குறைந்த நிறுவனமாக இருக்கிறது.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 37 சதவீதம் குறைந்து 151 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. இந்த நிலையில் நிறுவன தலைவரான தந்தைக்கும், தலைமை செயல் அதிகாரியான மகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது பூதாகரமாகியுள்ளது.
சிங்கப்பூரில் குவிக் குடும்பத்தினர் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கின்றனர் . இவர்களில் லெங் பெங் இந்த நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை தலைவர், அவருடைய மகன் ஷெர்மான் மூன்றாம் தலைமுறை தலைவராக இருக்கிறார். லெங் பெனின் தந்தை 1920 களில் சீனாவை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் குடிபெயர்ந்தார் இதனை அடுத்து அவர் ரியல் எஸ்டேட் நிறுவனமான சிடிஎல்லை தொடங்கினார். இந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் தற்போது மகனுக்கும் தந்தைக்கும் இடையே நிர்வாக பிரச்சினை உருவெடுத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications