சர்வதேச அளவில் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 80ஆவது இடம் கிடைத்திருக்கிறது. 'Henley Passport Index' என்ற பெயரில் ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டை சேர்ந்தது என்ற புள்ளிவிவரம் வெளியிடப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அதை கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமலும் , வருகையின் போது வழங்கப்படக்கூடிய on arrival visa பெற தகுதி பெற்று இருக்கின்றனர் என்ற அடிப்படையில் தான் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை பெற்றுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியுமாம்.
இந்த பட்டியலில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். மூன்றாவது இடத்தை ஆறு நாடுகள் பகிர்ந்துள்ளன. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து , லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இடம் பிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் 2025 ஆம் ஆண்டில் 80ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் . இது கடந்தாண்டு 57 ஆக இருந்தது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் இந்த பட்டியலில் 101 வது இடத்தில் இருந்து 103 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 34 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
இந்த பட்டியலில் குறிப்பிட்ட நாடுகளின் பாஸ்போர்ட்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகள் மோசமான இடத்தில் உள்ளன. சோமாலியா, வங்கதேசம், வடகொரியா ஆகிய நாடுகளும் மோசமான பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் சிங்கப்பூரோடு சேர்த்து ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவையும் முதலிடத்தில் இருந்தன. தற்போது சிங்கப்பூர் மட்டுமே முதலிடத்தில் இருக்கிறது மற்ற நாடுகள் 2 மற்றும் 3ஆம் இடங்களுக்கு சென்று விட்டன.
Story Written By: Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications