வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு தீவையே விலைக்கு வாங்குவது சர்வ சாதாரணமான நிகழ்வுதான்.
ஆனால் இந்தியாவை சேர்ந்த அதுவும் ஒரு பாடகர் சொந்தமாக ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளார் என்றும் அந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கியுள்ளது என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அந்த பாடகர் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பாடகர் மிகா சிங்
பிரபல பாடகர் மிகா சிங் என்பவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அந்த தீவில் ஒரு ஏரியும் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பாடகர் மிகா சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த தீவுக்கு அவர் விசைப்படகில் செல்லும் காட்சிகள் உள்ளது.
முதல் இந்திய பாடகர்
இதனை அடுத்து சொந்தமாக ஒரு தீவை வைத்திருக்கும் முதல் இந்திய பாடகர் என்ற பெருமை பாடகர் மிகா சிங் அவர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மிகா சிங் வாங்கிய தீவின் மதிப்பு எவ்வளவு? அந்த தீவு எங்கே உள்ளது? போன்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை
ஏரியுடன் கூடிய தீவு
பாடகர் மிகாசிங் வாங்கிய தீவில் பரந்து விரிந்து தண்ணீர் உள்ள ஏரியும் உள்ளது என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். அதேபோல் அந்த தீவில் அவர் 7 படகுகள் வைத்திருக்கிறார் என்பதும், 10 குதிரைகள் வைத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படகுகள் மற்றும் குதிரைகளை அவர் தீவை சுற்றிப்பார்க்க போக்குவரத்து வாகனமாக பயன்படுத்துகிறார்.
வீடியோ
பாடகர் மிகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீவில் உள்ள ஏரியில் விசைப்படகில் செல்லும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாடகர் மிகா சிங் சொர்க்கத்தில் தனது நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர்தான் உண்மையான ராஜா என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்
பாப் பாடகர்
45 வயதான மிகா சிங், மேற்குவங்கத்தை சேர்ந்தவர். 1977ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பாப் பாடகர் என்பதும், இவர் பாடிய ஏராளமான பாலிவுட் திரைப்பட பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications