பெங்களூரு: பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக போக்குவரத்து பிரச்சனை உருவாகி இருக்கிறது. சாலை உள் கட்டமைப்புகள் சரியாக இல்லை என்பதால் பெங்களூரை விட்டு வெளியேறப் போகிறோம் என பல்வேறு நிறுவனங்களும் அறிவிக்க தொடங்கிவிட்டன.
பெங்களூரில் வேலை செய்யக்கூடிய ஐடி ஊழியர்கள் பலரும் நாளுக்கு நாள் இங்கே போக்குவரத்து பிரச்சனை பெரிய பிரச்சினையாக இருக்கிறது என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் குமுறி வருகின்றனர். இந்த சூழலில் கர்நாடக மாநில அரசு பெங்களூர் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஒரு தைரியமான நடவடிக்கையை எடுக்க தயாராகி வருகிறது.

கர்நாடகாவில் செயல்படக்கூடிய பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களோடும் அரசு மிக முக்கியமான ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது . அதில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்சனை முக்கிய இடம் பிடித்திருந்தது . இதில் கர்நாடக மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜினேஷ் கலந்து கொண்டார். பயோகான் தலைவர் கிரண் மஸூம்தர் ஸா மற்றும் நகர்ப்புற திட்டமிடல் நிபுணர் ஆர்கே மிஸ்ரா மற்றும் பிரபல கட்டிட வடிவமைப்பாளரான நரசிம்மன் என பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பெங்களூருவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது . இதில் குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாலைகளில் ஒரே ஒரு நபருக்காக காரை எடுத்து செல்பவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது congestion tax என்ற போக்குவரத்து நெரிசல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த ஆர் கே மிஸ்ரா, இந்த கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் வரி என்ற ஒரு புதிய கட்டணம் குறித்து அனைவரும் ஆலோசனை செய்தோம் என கூறியிருக்கிறார் .உதாரணமாக அவுட்டர் ரிங் சாலையில் ஒரே ஒரு நபருக்கு ஒரு கார் செல்கிறது என்றால் அவர் அதற்கு கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்ற வகையில் ஒரு திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினோம் என கூறி இருக்கிறார்.

ஒரு நபருக்காக ஒரு கார் செல்லும்போது சாலையில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது இவ்வாறு கூடுதல் கட்டணம் விதித்தால் மக்கள் ஒருவருக்காக ஒரு காரை கொண்டு செல்வதற்கு மாற்றாக Car pooling முறைக்கு மாறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உதவும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.
பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கார்களை பயன்படுத்துவதை குறைக்க இது உதவும் என்றும் , பீக் அவர்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் என்றும் அரசு கருதுகிறது. தற்போதைக்கு பெங்களூருவின் அவுட்டர் ரிங் சாலை தான் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் செல்ல வழிவகை செய்யக்கூடிய ஒரு சாலையாக இருக்கிறது. வடக்கே ஹெப்பலில் இருந்து தெற்கே சில்க் போர்டு வரை இந்த சாலை செல்கிறது.
அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய ஒரு சாலையாகவும் இதுதான் இருக்கிறது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு கட்டணத்தை விதித்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என அரசு கருதுகிறது . இது தவிர சாலை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் 90 நாட்களில் தீர்ப்பது என ஒரு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கிரண் மஸூம்தர் ஷா தெரிவித்திருக்கிறார் . சாலைகள் சீரமைப்பது , குப்பைகள் இல்லாத சாலையாக மாற்றுவது கால்வாய்களை சரி செய்வது உள்ளிடவற்றை மேற்கொள்வோம் என அரசு உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications