தெலுங்கானாவில் ஒரேயொரு திரை கொண்ட தியேட்டரில் சில நாட்களில் வெறும் 10 பேர் மட்டுமே படம் பார்க்க வருகின்றனர் என்ற கவலைக்குரிய செய்தி சமீபத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியது.
ஒரு தியேட்டரில் ஒரு காட்சிக்கு 10 என்றால் தினசரி 4,000 வருமானம் ஈட்டும் இந்த அரங்கத்தை மூடவே உரிமையாளர்கள் விரும்புகின்றனர். ஏனெனில், திறந்திருக்கும்போது மின்சாரக் கட்டணம், பராமரிப்பு மற்றும் பிற செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

இதனால் அவர்கள் சுமார் ₹7,000 வரை இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இதே காரணத்தால், பல தனித் திரை அரங்கங்கள் அடுத்த சில நாட்களுக்குள் மூடப்பட இருப்பதாக அறிவித்துள்ளன.
ஒரு காலத்தில், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகள் கைதட்டி, விசில் அடித்து, டான்ஸ் ஆடி, மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து சில்லறையைச் சிதறவிட்டுக் கொண்டாடிய களமாக இருந்தது இந்த சிங்கிள் ஸ்கிரீன் கொண்ட தியேட்டர்கள்.
முதல் நாள், முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் உற்சாகமான கூட்டத்திற்கு 1000 இருக்கைகளும் கூட போதாத அளவிற்கு இருந்தன. இன்று அந்தக ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம் எங்கே போனது..?!
மக்கள் இத்தகைய தியேட்டர்கள் மீது ஆர்வம் காட்டாத காரணத்தால் இன்று இந்தத் தனித் திரை கொண்ட தியேட்டர்கள் அனைத்தும் இருள் சூழ்ந்த தூசி படிந்த பாதைகள், பழைய நாற்காலிகள், கிழிந்த போஸ்டர்கள், உடைந்த கூரையில் இருந்து வரும் வெளிச்சம் மட்டுமே மீதமுள்ளது. இந்த நிலை தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து தனித் திரை அரங்கங்களும் இப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்..? ஏன் இந்த அவல நிலை..? தொழில்நுட்ப வளர்ச்சி தான் தனித்திரை அரங்கங்களின் வீழ்ச்சிக்கு வில்லனாக மாறி, மக்கள் டெக்னாலஜியை ஹீரோவாக கொண்டாட துவங்கினர்.
தனித் திரை அரங்கங்களின் வளர்ச்சி முதல் அடி வைத்தது, தொலைக்காட்சி பெட்டிகள். இந்திய வீடுகளில் டிவி பிரபலமடைந்ததிலிருந்தே தனித் திரை அரங்கங்கள் போராட்டத்தைச் சந்திக்கின்றன.
தொலைக்காட்சி மூலம் உலகமெங்கும் இருந்து படங்களையும் நிகழ்ச்சிகளையும் மக்கள் பார்க்க முடிந்தது. அதனால், பொழுதுபோக்கிற்காக மக்கள் திரையரங்கிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது, பட்டனை தட்டினால் போதும் என்ற நிலையில் கேபிள் டிவி மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது.
ஆனால், புதிய படங்களை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் தியேட்டர்கள் இன்னும் மதிப்புடன் இருக்கிறது. ஆனால் அப்படி மதிப்புடன் திகழும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் ஊருக்கு ஒன்று அதிகம் என்றால் 2-3 மட்டுமே உள்ளது.
VCR காலம்: இதன் பின்னர் VCR (வீடியோ கேசட் ரிக்கார்டர்) காலம் வந்தது. அது ஒரு 15 இன்ச் லேப்டாப் அளவுள்ள லேசான கருப்பு சாதனம். டெக்கில் VCR கேசட் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு முழு படத்தைப் பார்க்க முடிந்தது.
மும்பை போன்ற பெரு நகரங்களில் வீடியோ டேப் வாடகைக் கடைகள், சட்ட விரோதமாக்க விற்கப்படும் கேசட் என பல வகையில் தியேட்டருக்கு செல்லும் குடும்ப ரசிகர்களை வீட்டில் கட்டிப்போட்டது இந்த வீசிஆர். பின்னாளில் CD/DVD ஆக மாறி ஒரே டிவிடி-யில் 2 -3 படங்களை கொண்டு மக்கள் பார்த்தனர்.
இந்த காலகட்டத்தில் தான் திருட்டு விசிடி அதிகரித்து புது படங்களுக்கும் பெரும் தலைவலியாக மாறி, தியேட்டர்களுக்கு ரத்த கண்ணீர் வரவழைத்தது. இந்த காலகட்டத்தில் விஷால் போன்ற புரட்சி தளபதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிளம்பி திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டது.
இது ஓய்ந்த பின்பு இணையத்தில் டோரென்ட் மூலம் காலையில் ரிலீஸ் ஆன படம் மதியம் சுட சுட தியேட்டர் பிரின்ட் விடிவில் வெளியானது. அடுத்த சில காலத்தில் வெளிநாட்டில் இந்திய நேரத்திற்கு முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் படங்களை கேமரா வைத்து ஷூட் செய்து டோரென்ட் மூலம் ரீல்ஸ் செய்யப்பட்டு வந்ததில் தமிழ் ராக்கர்ஸ் பல தயாரிப்பாளர்களை பயமுறுத்தியது.
இதன் பின்பு சினிமா ரிவ்யூவ் என்ற பெயரில் முதல் நாளுக்கு தியேட்டர் செல்லும் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டுப் பெரும் பிரச்சனைக்குத் தள்ளப்பட்டனர் தியேட்டர் உரிமையாளர்கள். இந்த சினிமா ரிவ்யூவ் மூலம் நல்ல நல்ல தியேட்டர் உரிமையாளர்கள் கூட பாதிக்கப்பட்டனர் என்பது தான் உண்மை.
தற்போது நாட்டு மக்களை OTT தளங்கள் கட்டிப்போட்டு உள்ளது. OTT தளங்களும், மல்டிபிளெக்ஸ்களும் ஒற்றை திரையரங்குகளை உண்மையிலேயே அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் ஒவ்வொரு 200 புதிய மல்டிபிளெக்ஸ்களுக்கு சுமார் 100 - 150 ஒற்றைத் திரை கொண்ட திரையரங்குகள் மூடப்படுகின்றன.
சொல்லப்போனால் கொரோனா தொற்றுநோய்-க்கு பின்பு மல்டிபிளக்ஸ்களின் வயிற்றில் OTT அடிக்க துவங்கியுள்ளது.
சமீபத்திய BookMyShow கணக்கெடுப்பில் 90% இந்தியர்கள் இன்னும் பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள் என்று கண்டறிந்துள்ளது. அதனால் மக்கள் மீண்டும் திரையரங்குகள் பக்கம் வருவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அது பெரும்பாலும் மல்டிபிளக்ஸ்கள் தான்.
ஏனென்றால், மோசமாகப் பராமரிக்கப்படும் ஒற்றைத் திரை கொண்ட திரையரங்கில், சுவையான உணவு மற்றும் பானங்களை வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை, திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்னும் பின்னும் சுற்றித்திரிய அல்லது ஷாப்பிங் செய்யவோ வாய்ப்பு இல்லை.
மக்களின் விருப்பத் தேர்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை திரையரங்கு வர்த்தகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. இதைவிட முக்கியமான பிரச்சனை என்னவென்றால் மூடப்படும் தியேட்டர்கள் அனைத்தும் தற்போது ஷாப்பிங் காம்பிளெக்ஸ் ஆகவோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பாகவோ மாறி வருகிறது.
ஒரு காலத்தில் மக்களின் விசில் சத்தத்தால் நிரம்பி வழிந்த தியேட்டர்கள் மாயமாகிறது. இதனால் இதை சார்ந்து இருக்கும் மிகப்பெரிய வர்த்தகம் மாயமாகி, மல்டிபிளக்ஸ் துறையில் சிறந்து விளங்கும் சில நிறுவனத்தின் கைகளுக்கு மட்டுமே செல்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications