கட்டம் கட்டி சரியாகக் காய் நகர்த்தினால்.. 1 கோடியை ஈசியாக சம்பாதிக்க முடியும்..! எப்படி..?

கோடீஸ்வரன் ஆவது எப்படி? இந்தக் கேள்விக்குப் பலரும் பல விதமான பதில்களை அளித்தாலும், ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கான தகுந்த முதலீடு இருந்தால் மட்டுமே கட்டாயம் சம்பாதிக்க முடியும்.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்-ஐ பிடிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும், இல்லையெனில் அதிகப்படியான ரிஸ்க் எடுக்க வேண்டும்.

இவ்விரண்டும் இல்லாமல் 10 வருடத்திற்குள், பாதுகாப்பாக அதிகம் ரிஸ்க் எடுக்காமல் ஒரு கோடி ரூபாய்ச் சம்பாதிப்பது எப்படி என்பதை நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

மாத சம்பளக்காரர்கள்

மாத சம்பளக்காரர்கள்

மாத சம்பளம் வாங்குபவர் அல்லது சிறு தொழிலதிபராக இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய கார்பஸை தொகையை உருவாக்க வேண்டும் என்பது முக்கியக் கனவாக இருக்கும். இந்தத் தொகையை ஓய்வு பெற்ற பின்பு பயன்படுத்தவோ அல்லது பிற முக்கிய வாழ்க்கை திட்டத்திற்குப் பயன்படுத்த முடியும்.

ஒரு கோடி ரூபாய்

ஒரு கோடி ரூபாய்

பலருக்கு ஒரு கோடி ரூபாய் என்பது ஒரு இமாலய தொகை என்று தோன்றினாலும் முதலீட்டுச் சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, நீண்ட காலத்திற்குப் பணவீக்க பாதிப்புகளைத் தடுத்து அதிக வருவாயை வழங்கும் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்து சரியான வகையில் தொடர்ந்து முதலீடு செய்தால் கட்டாயம் கோடீசுவரராகலாம்.

முதலீட்டுத் தொகை

முதலீட்டுத் தொகை

ஒரு முதலீட்டுத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டுத் தொகையைப் பொறுத்து 5, 10 அல்லது 15 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராகலாம். ஐந்து வருட காலத்தில் ஒரு கோடி ரூபாயைத் திரட்ட வேண்டும் என்றால் அதிகப்படியான தொகை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

மீடியம் ரிஸ்க் திட்டம்

மீடியம் ரிஸ்க் திட்டம்

இன்றைய காலகட்டத்தில் மீடியம் ரிஸ்க் உடன் அதிகப்படியான லாபத்தைப் பெற வேண்டும் என்றால் கட்டாயம் எஸ்ஐபி திட்டம் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில் 10 வருடத்தில் ஒரு கோடி ரூபாய் தொகை பெற வேண்டும் என்றால் எவ்வளவு பணத்தை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும்..?

எஸ்ஐபி திட்டம்

எஸ்ஐபி திட்டம்

எஸ்ஐபி திட்டத்தைப் பொருத்த வரையில் அதன் லாப அளவீடு அடிப்படையில் முதலீடு தொகை பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக வருடம் 8 சதவீதம் லாபத்தை அளிக்கும் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தும் பட்சத்தில் மாதம் 55000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 10 வருடத்தில் 66 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1.01 கோடி ரூபாயை பெற முடியும்.

10 சதவீதம் லாபம்

10 சதவீதம் லாபம்

இதேபோல் வருடம் 10 சதவீதம் லாபத்தை அளிக்கும் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தும் பட்சத்தில் மாதம் 4900 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 10 வருடத்தில் 58.80 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1.01 கோடி ரூபாயை பெற முடியும்.

 1.02 கோடி ரூபாய்

1.02 கோடி ரூபாய்

மேலும் வருடம் 12 சதவீதம் லாபத்தை அளிக்கும் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தும் பட்சத்தில் மாதம் 44000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 10 வருடத்தில் 52.80 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1.02 கோடி ரூபாயை பெற முடியும்.

15 வருட முதலீடு

15 வருட முதலீடு

இதே எஸ்பிஐ திட்டத்தில் உங்களுடைய டார்கெட் 15 வருடமாக இருக்கும் பட்சத்தில் முதலீட்டுத் தொகை பாதியாகக் குறையும், உதாரணமாக வருடம் 8 சதவீதம் லாபத்தை அளிக்கும் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தும் பட்சத்தில் மாதம் 29000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 10 வருடத்தில் 52.20 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1.01 கோடி ரூபாயை பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+