வீட்டு கடன் - SIP காம்போ: நினைத்துப் பார்க்க முடியாத லாபம்..!

சொந்த வீடு என்பது எல்லோருடைய கனவு, இன்று இதைச் சாத்தியமாக ரொம்ப ஈசி, காரணம் மாதம் சம்பளம் வாங்கினால் மட்டும் போதும் வங்கிகள் தேடி வந்து வீட்டுக் கடன்களைக் கொடுக்கிறது. இதனால் சொந்த வீட்டை வாங்குவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் எளிதான காரியம்.

இதற்கு ஏற்றார் போல் வங்கிகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அதிகப்படியான தள்ளுபடியில் வீடுகளை விற்பனை செய்து வரும் காரணத்தால் மலிவான விலையிலேயே வீடுகளை வாங்க முடியும்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது இருக்கும் ஓரே பிரச்சனை வீட்டுக் கடனை எப்படி முடிப்பது என்பது தான்.

வீட்டுக் கடன் சுமை

வீட்டுக் கடன் சுமை

வீட்டுக் கடனை விரைவாக முடிக்க வேண்டும் என்றால் அசல் தொகையை வேகமாகக் குறைக்க வேண்டும், அப்படிக் குறைக்கும் போது ஈஎம்ஐ தொகை குறைவது மட்டும் அல்லாமல் வீட்டின் மதிப்பு உயரும் போது அதிக லாபம் கிடைக்கும். உதாரணமாக ஒரு கணக்கைப் பார்ப்போம்.

30 லட்சம் வீட்டுக்கடன்

30 லட்சம் வீட்டுக்கடன்

29 வயதுடைய ஒருவர் ஹோம் லோன் மூலம் வீட்டை வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.

வீட்டுக் கடன் தொகை : 30 லட்சம் ரூபாய்

வீட்டுக் கடன் காலம் : 25 வருடம்

வீட்டுக் கடன் வட்டி விகிதம் : 6.75 சதவீதம் தற்போது எஸ்பிஐ வங்கியில் கிடைக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம்

மாதம் ஈஎம்ஐ தொகை : 20,727 ரூபாய்

25 வருடத்திற்கு நீங்கள் செலுத்திய மொத்த வட்டி பணம் : 32,18,204 ரூபாய்

கடன் தொகை + வட்டி தொகை : 62,18,204 ரூபாய்

25 வருடத்திற்குப் பின்பு

25 வருடத்திற்குப் பின்பு

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பு 25 வருடத்திற்குப் பின்பு 62.18 லட்சம் ரூபாய். இந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டின் சந்தை மதிப்பு 62.18 லட்சத்திற்கு மேல் இருந்தால் கட்டாயம் லாபம் தான், ஒருவேளை நீங்கள் வாங்கிய வீடு அப்பார்ட்மென்ட் ஆக இருந்தாலோ, அல்லது நிலத்தின் மதிப்பு 2 மடங்கு அளவிற்கு உயரவில்லை என்றால் வங்கிக்குத் தான் லாபம், உங்களுக்கு இல்லை.

10 சதவீதம் தொகை முதலீடு

10 சதவீதம் தொகை முதலீடு

இந்தப் பிரச்சனையை உங்கள் ஈஎம்ஐ தொகையில் வெறும் 10 சதவீத தொகையை ஒவ்வொரு மாதமும் எஸ்பிஐ திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வீட்டுக் கடன் திட்டத்திற்கு நீங்கள் செலுத்தும் மொத்த தொகையும் நீங்கள் பெற முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

வீட்டுக் கடன் ஈஎம்ஐ

வீட்டுக் கடன் ஈஎம்ஐ

இன்றைய விலைவாசியில் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையை முழுமையாகச் செலுத்தினால் பெரிய விஷயமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், வீட்டுக் கடனுக்குக் கூடுதல் தொகையைச் செலுத்தி கடன் அளவை குறைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் எளிமையாக ஒரு SIP திட்டம் மூலம் உங்கள் வீட்டுக் கடனின் மொத்த அசல் மற்றும் வட்டியைத் திரும்பப் பெற முடியும்.

2000 ரூபாய் முதலீடு

2000 ரூபாய் முதலீடு

சரி விஷயத்திற்கு வருவோம், மேலே கூறப்பட்ட கணக்கில் ஒரு மாதம் ஈஎம்ஐ தொகை 20,727 ரூபாய் இதில் 10 சதவீதம் தொகை 2000 ரூபாய் இதை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ செலுத்துவது போல ஒரு SIP திட்டத்தில் செலுத்தினால் 25 வருடத்திற்குப் பின்பு உங்களுக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா..?

எஸ்ஐபி திட்டம்

எஸ்ஐபி திட்டம்

மாதம் எஸ்பிஐ தொகை : 2000 ரூபாய்

எஸ்பிஐ காலம் : 25 வருடம்

தோராயமாகக் கிடைக்கும் லாபம் : 15 சதவீதம் வருடத்திற்கு

மொத்த முதலீட்டுத் தொகை : 6 லட்சம் ரூபாய்

கிடைக்கும் மொத்த தொகை : 65,68,147 ரூபாய்

நீங்கள் முதலீடு செய்யும் எஸ்பிஐ திட்டத்தில் 15 சதவீதம் லாபம் கிடைக்காது என நினைத்தால் சற்றுக் கூடுதலாக முதலீடு செய்யுங்கள்.

இரட்டிப்பு லாபம்

இரட்டிப்பு லாபம்


25 வருடத்தில் உங்கள் வீட்டுக் கடனுக்கு இணையான தொகையை எஸ்ஐபி முதலீட்டில் உங்களால் பெற முடியும் என்பதைத் தாண்டி கிட்டத்தட்ட இரட்டிப்பு லாபத்தைப் பெற முடியும் என்பதை இந்த ஐடியாவின் மைய கருத்து.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+