பங்குச் சந்தையில் பல முதலீட்டாளர்கள் விலை குறைவு என்பதால் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் செய்கின்றனர். குறுகிய கால அடிப்படையில் இந்த பங்குகளை வாங்கினால் தானே சிக்கல் நாம நீண்ட கால அடிப்படையில் இந்த பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்கின்றனர்.
ஆனால் அவற்றில் நீங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தாலும், நீங்க போட்ட காசை கூட உங்களால் எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இந்நிலையில், எஸ்ஐபிகள் வாயிலாக ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது என்று முதலீட்டாளர்களை எஸ்.நரேன் எச்சரித்துள்ளார்.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சியின் சிஐஓ சங்கர் நரேன் கூறியதாவது: 2008 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளின் விலை அதிகமாக உள்ளது. நிறுவனங்கள் 2008-09ம் ஆண்டுகளில் செய்தது போது போல் விரிவாக்கத்திற்காக வங்கி கடன்களை நம்பியிருக்கவில்லை.
அதற்கு பதிலாக, பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டுகிறார்கள், இதனால் அவர்கள் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகின்றன. பரஸ்பர நிதி நிறுவனங்கள் (மியூச்சுவல் பண்டுகள்) ஸ்மால மற்றும் மிட்கேப் பங்குகளில் தீவிரமாக பணத்தை முதலீடு செய்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பங்குச் சந்தைகள் சரிவை நோக்கி திரும்பினால், அவர்களால் பணத்தை திரும்ப பெறுவதில் சிரமப்படலாம். மிட் கேப் எஸ்ஐபிகள் நீண்ட காலத்துக்கு எதிர்மறையான வருமானத்தை (இழப்பு) அளித்துள்ளன என்பதை வரலாற்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
எனவே, முறையான முதலீடு மற்றும் பாதுகாப்பான திட்டம் என்ற நம்பிக்கையை கூட எஸ்ஐபிகள் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே ஒரு வேளை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்.நரேனின் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தை, நிப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸின் தற்போதைய நிலவரத்தை வைத்து நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு பங்கு அல்லது இன்டெக்ஸ் அதன் 52 வார உச்ச நிலையிலிருந்து 20 சதவீதம் சரிந்தால் அந்த பங்கு அல்லது இன்டெக்ஸ் வீழ்ச்சி மண்டலத்தில் இருப்பதாக கருதப்படும்.
நிப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் 2024 செப்டம்பரில் அதன் உச்சமான 18,688.30 புள்ளிகளை எட்டியது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக சரிவு கண்டு தற்போது அதன் உச்சத்திலிருந்து 21 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இதன்படி பார்த்தால், இந்த ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் வீழ்ச்சி பகுதியில் உள்ளது. இதனால் தற்போது இந்த இன்டெக்ஸில் முதலீட்டை தொடருவது என்பது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications