பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களாக இருக்கும் சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எந்த முதலீட்டு முறையை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். தங்கள் போர்ட்ஃபோலியோவில் எந்த முதலீட்டை வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும் நபர்களுக்காகத்தான் இந்த பதிவு. இது முற்றிலுமாக ஒருவரின் வருவாய் எதிர்பார்ப்பு, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்தது.
பங்குச்சந்தை ஏற்ற இலக்கங்களின் போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்களுடைய கணக்கில் எந்த ஃபண்டை வைத்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் சிரமப்படுகின்றனர்.

முதலீடு என்று வரும்போது பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்ளின் அடிப்படையில் முதலீடு செய்யக்கூடாது. இது ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டு காலம் மற்றும் பணத் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டால் எந்த சந்தை சூழ்நிலை இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை என்று ஆனந்த் ரதி பங்குகள் மற்றும் பங்கு தரகர்களின் இணை இயக்குனர் மற்றும் தலைவர் தாமஸ் ஸ்டீபன் கூறியுள்ளார்.
சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், தற்போதைய சூழ்நிலையில் எதில் முதலீடு செய்வது?
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், துறைசார் மற்றும் தீமேட்டிக் ஃபண்டுகள் உட்பட சுமார் 21 பிரிவுகள் உள்ளன. இதில், துறைசார் மற்றும் தீமேட்டிக் ஃபண்டுகள் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக செயல்பட்டன. மேலும் அதிக வருமானத்தை வழங்கின. குறிப்பாக, ஃபார்மா மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த ஃபண்டுகள் 6.33% என்ற விதத்தில் வருமானம் தந்தன. ஸ்மால் கேப் ஃபண்டுகள் 2.33% வருமானத்தை அளித்தன.
மல்டி கேப் மற்றும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள் 2.19% மற்றும் 2.02% வருமானத்தை அளித்தன. அதைத் தொடர்ந்து ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் 1.71% வருமானத்தை வழங்கின. மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் 1.64% மற்றும் 1.20% வருமானத்தை அளித்தன.
தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் ஃபண்டுகளின் செயல்திறனைப் பார்த்த பிறகு, இந்த கட்டத்தில் ஒருவர் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?
தாமஸ் ஸ்டீபன் கூறுகையில், நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்கள், அந்த தருணத்திற்கு ஏற்ற முதலீட்டை தேர்வு செய்வதை விட தரமான முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். இதன் அடிப்படையில், லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
2024-ஆம் ஆண்டில் இதுவரை, உள்கட்டமைப்புத் துறை சார்ந்த ஃபண்டுகள் முன்னிலை வகிக்கின்றன. இவை 48.33% வரை அதிக வருமானத்தை அளித்துள்ளன. ஹெச்டிஎஃப்சி டிஃபென்ஸ் ஃபண்ட், பாதுகாப்புத் துறையை அடிப்படையாகக் கொண்ட ஃபண்டு, இது சுமார் 44.35% வருமானத்தை அளித்துள்ளது.
அதே நேரத்தில் இன்வெஸ்கோ இந்தியா ஃபோகஸ்டு ஃபண்ட் 37.33% வருமானத்தை அளித்தது. மஹிந்திரா மானுலைஃப் மிட் கேப் ஃபண்ட் இதுவரை 33.15% வருமானத்தை அளித்துள்ளது. இரண்டாவது பெரிய மிட் கேப் ஃபண்டான கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், 32.45% வருமானத்தை வழங்கியுள்ளது. நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 29.76% வருமானத்தை வழங்கியுள்ளது.
தற்போது எழும் அடுத்த கேள்வி, SIP அல்லது லம்ப்சம்.. இதில் எந்த முதலீட்டு முறையை தேர்வு செய்ய வேண்டும்?
"நீண்டகால கண்ணோட்டத்துடன், சந்தை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு SIP அல்லது STP மூலம் படிப்படியாக முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்" என்று ஸ்டீபன் கூறியுள்ளார்.
எந்த ஒரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி தக்க ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications