தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து இன்று முடியும் வேளையில் 2 நாளில் 400க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது, இந்த நிலையில் புதிதாக உற்பத்தி தளம், சேவை தளத்தை அமைக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான இடத்தை உருவாக்கும் பணியில் தமிழ்நாடு அரசு இயங்க இப்போதே துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற் பூங்கா, சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கும் சிப்காட் 15 மாவட்டத்தில் 24 தொழிற்பூங்காவை உருவாக்கி நிர்வாகம் செய்து வரும் வேளையில், 6 துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 11 சிப்காட் பகுதிகள் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் 3 புதிய தொழிற்பூங்கா உருவாக்கும் பணிகளில் சிப்காட் நிர்வாகம் இறங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி பெரமலூரில் இருக்கும் இறையூர் சிப்காட், ராணிபேட்டையில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட், ஓசூரில் உள்ள சூளகிரி ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளைச் செய்யச் சிப்காட் டென்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இறையூர், பணப்பாக்கம், சூளகிரி சிப்காட் பகுதிகள் பயன்பாட்டு வர உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் சிப்காட் பகுதிகளில் இருக்கும் காலி இடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் புதிய முதலீடுகளும் வர துவங்கியுள்ளது. இதனால் பற்றாக்குறை அடுத்தச் சில ஆண்டுகளுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே 3 சிப்காட் பகுதிகள் தயாராகத் துவங்கியுள்ளது.
இந்தச் சிப்காட் பகுதியின் வளர்ச்சி இப்பகுதியை பெரிய அளவில் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும். சமீபத்தில் மணப்பாறை சிப்காட் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பே டாடா குழுமம் உட்படப் பல நிறுவனங்கள் நிலத்தைக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் மதுரையில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க இடத்தைத் தேடி பிடிக்க முடியாமல் இருப்பது அப்பகுதி மக்களின் நீண்ட காலப் புலம்பலாக உள்ளது.
சூளகிரியில் அமைக்கப்படும் சிப்காட்-ல் எலக்ட்ரிக் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications