தமிழ்நாட்டின் உற்பத்தி துறை வளர்ச்சிக்கும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பெரும் தொழிலதிபராகும் வாய்ப்பை கொடுத்துள்ளது சிப்காட். தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் என்பதை தான் SIPCOT என அழைக்கப்படுகிறது, இதன் ஆங்கில விரிவாக்கம் State Industries Promotion Corporation of Tamil Nadu Limited.
தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் சிப்காட், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் சிப்காட் இணையதளத்தில் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் சிப்காட் பகுதிகள் அமைந்துள்ளதோ, அங்கு யாருக்கு, எவ்வளவு நிலம், எவ்வளவு விலைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை கூகுள் மேப் அடிப்படையில் டேட்டா-வை தொகுத்து வழங்கியுள்ளது.
இதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். https://sipcot.tn.gov.in/ இணைய தளத்திற்கு நுழைந்த உடன் வலது புறம் மேலே நில விபரம் (LAND DETAILS) என்பதை கிளிக் செய்ய வேண்டும். உள்ள சென்ற உடன் Industrial Complex கீழ் சிப்காட் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக மணப்பாறை இன்டஸ்ட்ரீயல் பார்க் என்பதை கிளிக் செய்து Get Details என்பதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த உடன் எவ்வளவு நிலம் உள்ளது?, அதன் விலை என்ன என்பது குறித்த விபரம் கிடைக்கும். இதில் மணப்பாறை இன்டஸ்ட்ரீயல் பார்க்-ல் தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கும் நிலம் 135.85 ஏக்கர் உள்ளது, இதேபோல் ஒரு ஏக்கர் விலை 77 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து View GIS Map என்பதை கிளிக் செய்தால் யாருக்கு எந்த நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பகை மேப் அடிப்படையில் நிறுவனத்தின் பெயருடன் பார்க்க முடியும். உதராணமாக கீழே உள்ள புகைப்படத்தில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதை பார்க்க முடியும்.

1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிப்காட் மாநிலத்தில் தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க நிலத்தை குறைவான விலைக்கு அளிப்பதுடன், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் சேவையும் அளிக்கிறது.
SIPCOT தமிழ்நாட்டில் சுமார் 16 பகுதிகளில் தொழில்துறை வளாகங்களை நிறுவியுள்ளது. இதில் பர்கூர், செய்யார், கடலூர், கங்கைகொண்டான், கும்மிடிப்பூண்டி, ஓசூர், இருங்காட்டுக்கோட்டை, மப்பேடு, மானாமதுரை, நிலக்கோட்டை, ஒரகடம், பெருந்துறை, பிள்ளைப்பாக்கம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, தேர்வாய் கண்டிகை, வல்லம் - வடகை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
இதை தொடர்ந்து தருமபுரி, திருவண்ணாமலை, காரைக்குடி மற்றும் மணப்பாறையில் புதிய SIPCOT தொழிற்துறை வளாகத்தை விரைவில் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது. SIPCOT IT பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications