கோவை: தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற முக்கிய இலக்கை வைத்திருக்கும் வேளையில், மாநிலத்தில் பல இடத்தில் தொழிற்பூங்கா அமைத்து புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தொழில் மேம்பாட்டு அமைப்பான சிப்காட் தற்போது கோயம்புத்தூர் மாவட்டம் வரப்பட்டி கிராமத்தில் பாதுகாப்புத் துறை தொழில் பூங்கா அமைக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒப்புதலைப் பெற விண்ணப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூர், ஆதிகாலம் தொட்டு உற்பத்தி நகரமாக இருந்து வரும் வேளையில் கடந்த சில வருடங்களாகப் பெங்களூர்-க்கு இணையாக ஐடி சேவைத் துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையைப் போலவே சேவை - உற்பத்தித் துறை சமநிலைப்படுத்தும் வகையில் பல உற்பத்தி நிறுவனங்கள் திடீரென அதிகளவில் கோயம்புத்தூர்-க்கு படையெடுத்து வருகிறது, இதற்காகக் கோயம்புத்தூரில் பல தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது தான் இந்த பாதுகாப்புத் துறைக்கான பிரத்தியேக தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம்.
இதுகுறித்து சிப்காட் மேலாண்மை இயக்குனர் கே.செந்தில்ராஜ் அவர்கள், மாநில சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையத்தின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா வரப்பட்டி கிராமத்தில் பாதுகாப்பு தொழில் பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீடு அறிக்கையை ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 370.59 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பாதுகாப்பு தொழில் பூங்காவை, கோவை டிபென்ஸ் காரிடார்-ன் ஒரு பகுதியாக சிப்காட் மேம்படுத்த உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் பொருட்களின் மொத்த உற்பத்தியில் 30% க்கும் அதிகமான பங்களிப்பைத் தமிழகத்தில் அமைந்துள்ள சென்னை, சேலம், கோவை, திருச்சி மற்றும் ஓசூர் டிபென்ஸ் காரிடார் மூலம் செய்யும் இலக்கை அடைய, முதல் கட்டமாக விமான மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான உற்பத்தி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உபகரணங்களைத் தயாரிக்கும் துறைக்கு அதிக கவனம் செலுத்தப்படத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.
கோயம்புத்தூர், வரப்பட்டி கிராமத்தில் அமைக்கப்படும் பாதுகாப்புத் துறை தொழில் பூங்காவை சிப்காட், டிட்கோ உடன் இணைந்து அமைக்கிறது. மேலும், பாதுகாப்பு பூங்கா-வில் தொழிற்சாலை அமைக்கும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட உள்ளது. இந்த தொழிற்பூங்கா மூலம் சுமார் ரூ. 2,500 கோடி முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சிப்காட் மற்றும் டிட்கோ ஆகியவை டாடா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ஒரு பொது பொறியியல் வசதிகள் மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு அதிகப்படியான தொகையில் இறக்குமதி செய்வதில் கச்சா எண்ணெய், தங்கம் ஆகிய இரண்டுக்கும் அடுத்தபடியாக இருப்பது பாதுகாப்புத் துறை உபகரணங்களும், ஆயுதங்களும் தான். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல திட்டங்களையும், கொள்கை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் பாதுகாப்பு தொழிற்துறை பூங்கா அமைக்கப்படும் காரணத்தால், இம்மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்கித்தரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications