தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலருக்கு உயர்த்தவும், மாநிலத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பெரிய நிறுவனங்களையும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் சிப்காட் தொழிற்பூங்கா அமைத்து வருகிறது.
இந்த நிலையில் பல வருடமாக முடங்கியிருந்த தர்மபுரி சிப்காட் பணிகள் சமீபத்தில் சூடுபிடிக்கத் துவங்கிய நிலையில், தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 10 வருடத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி-யில் சிப்காட் மற்றும் இதர தொழிற்பூங்காவில் ஏகப்பட்ட தொழிற்சாலைகளும், முதலீடுகளும் குவிந்த காரணத்தால் தர்மபுரி சிப்காட் மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தொழில் ஊக்குவிப்பு கழகம் (சிப்காட்), தர்மபுரி மாவட்டத்தில் நான்கு கிராமங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைக்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.
இதுகுறித்து சிப்காட் நிர்வாக இயக்குநர் கே.செந்தில்ராஜ் கூறுகையில், மத்திய அமைச்சகத்தின் உறுப்பினர் செயலாளர் (இன்ஃப்ரா-1) க்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அறிவித்தார். இந்த அறிக்கையின் படி சிப்காட் நிர்வாகம் தர்மபுரி தாலுக்காவின் அதகபாடி கிராமம், நல்லம்பள்ளி தாலுக்காவின் அதியமான் கோட்டை, தடங்கம் மற்றும் பாலஜங்கமன்ஹல்லி கிராமங்களில் இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
சிப்காட் அமைப்பு தர்மபுரி மாவட்டத்தில் சுமார் நான்கு கிராமங்களில் 1724.566 ஏக்கர் பரப்பளவில் 7(c) - ஏ வகை திட்டத்தின் கீழ் தொழிற்பூங்கா அமைக்கும். இதற்காகத் தமிழ்நாடு அரசு சுமார் 462 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் இந்த தொழிற்பூங்கா மூலம் சுமார் 18,700 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் மற்றும் ஓசூரில் தற்போது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன, இத்துறை வளர்ச்சிக்கு ஏற்றார் போல் தர்மபுரி சிப்காட் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதன் மூலம் தர்மபுரியும் EV துறை நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அமைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் இந்த சிப்காட் தொழிற்துறை பகுதியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் சிவப்பு பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் இங்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தர்மபுரி சிப்காட்-ல் ஏற்கனவே ஓலா மற்றும் பிற நிறுவனங்களின் முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரே இடத்தில் அட்வான்ஸ் செல் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலை, விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்காக்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரிய துணை சுற்றுச்சூழலை கொண்ட EV ஹப் அமைக்கும் திட்டத்தில் உள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications