டாமால் டுமில்.. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அமோகம்..!

இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என அழைக்கப்படும் சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் இந்த வருடமும் ஏராளமான விற்பனையாளர்கள் பட்டாசுகள் வாங்கச் சிவகாசிக்குக் குவிந்தாக கூறப்படுகிறது.

டாமால் டுமில்.. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அமோகம்..!

வழக்கமாக விற்கப்படும் மத்தாப்பு, பூந்தொட்டி, ராக்கெட் போன்றவற்றைத் தாண்டி இந்த ஆண்டு குழந்தைகளைக் கவரும் வண்ணம், இதேபோல் பாதுகாப்பு நிறைந்த புது வகை ஃபேன்சி பட்டாசுகள் அதிகளவில் சந்தைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் மழை பெய்யும் காரணத்தால் பட்டாசு கடைகளில் கூட்டம் குறைந்து காணப்படுவதாகவும், இன்று மத்தியம் முதல் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியதாகவும், மாலையில் பெரும் கூட்டம் வரும் என மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read

இதேபோல் கடந்த 2 வாரங்களாக வெளி மாநிலங்களுக்கான கட்டளைகள் அதிகரித்துள்ளது எனக் கூறும் சிவகாசி பட்டாசு வியாபாரிகள், இந்த ஆண்டு ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பட்டாசு விற்கப்படுவதைக் காட்டிலும் கடைகளுக்கு நேரில் சென்று வாங்கும் மக்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ஆன்லைன் பட்டாசு விற்பனையில் அதிகளவில் மோசடி நடந்த நிலையில், இந்த ஆண்டு கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 7000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சிவகாசியில் இருந்து விற்கப்பட்டதாகப் பட்டாசு விற்பனையாளர் அமைப்பு, இந்த ஆண்டு 10000 கோடி ரூபாய் அளவீட்டைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Recommended For You

மதுரையில் தீபாவளி ஷாப்பிற்காக விளிக்குத்தூண், மாசி வீதிகளில் மக்கள் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக மதுரை நகரில் மட்டும் 300க்கும் அதிகமான பட்டாசு கடைகள் போடப்பட்டு உள்ளது. சென்னையில் தீவுத் திடலில் மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.

இதேபோல் பெங்களூர் ஓசூர் எல்லையில் ஒருபக்கம் வாகன நெரிசல் அதிகமாகியிருக்கும் வேளையில், மறுபக்கம் இரு புறமும் பட்டாசு கடைகள் நிறுவப்பட்டு உள்ளாது. பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டு போகும் மக்களும், பெங்களூரில் இருக்கும் மக்களும் ஓசூரில் பட்டாசு வாங்க அலைகடலாகத் திரண்டு உள்ளனர்.

பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து துவங்கி ஓசூர் பத்தலப்பள்ளி வரையில் பட்டாசு கடைகளில் 90 -95 சதவீத தள்ளுபடி விலையில் பட்டாசு விற்கப்பட்டு வருகிறது. இதேவேளையில் மக்கள் இந்த கடைகளில் எம்ஆர்பி விலை அதிகரித்துவிட்டு அதிக தள்ளுபடி கொடுப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+