தீபாவளி நெருங்கிவிட்டால், சிவகாசியில் உள்ள வெடிக்கடைக்காரர்களுக்கு குஷி ஆகிவிடும். அனால் இந்த முறை சிவகாசியில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகக் கவலை அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கடைகள் திறக்கப்பட்டதும், ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்ததும் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் சிலர் குறைந்த விலையில் வெடி வழங்கப்படுவதாக கூறும் மோசடிக்காரர்களிடமும் சிக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சில்லறை பட்டாசு கடைகள் உள்ள நிலையில், கடை உரிமையாளர்கள் ஆயுத பூஜையிலிருந்து பட்டாசு விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் இந்த தீபாவளிக்கு வழக்கமாக இருப்பதை விட வாடிக்கையாளர் வருகை குறைவாக உள்ளது. கடைகளில் உள்ள கவுண்டர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளன.

"மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புவதும், மாத இறுதியில் தீபாவளி பண்டிகை நடைபெறுவதும் விற்பனை வீழ்ச்சிக்கு காரணம். பயணச் செலவைக் குறைக்கவும், குறைந்த விலையில் உயர்தர பட்டாசுகளை வாங்கவும், தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். சிவகாசியில் சொந்தமாக கடைகளை வைத்திருப்பது போல் நடித்து, ஆன்லைனில் பட்டாசுகளை விற்கும் மோசடியாளர்களுக்கு பல வாடிக்கையாளர்கள் பலியாகின்றனர்" என்று சில கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆமத்தூரில் உள்ள பட்டாசு கடையின் உரிமையாளர் ஒருவர் தனது குடும்பம் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த தங்கள் வாடிக்கையாளர்கள் சிலர் ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை மோசடிக்காரர்களின் போலி இணையதளத்தில் ஆர்டர் செய்து பணத்தை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இணையதளங்கள் சிவகாசியில் உள்ள பட்டாசு விற்பனை நிலையங்கள் போலவே இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆன்லைனில் பட்டாசு வாங்கும்போது தள்ளுபடி விலையில் மக்கள் ஏமாற வேண்டாம். குருவி பட்டாசு பாக்கெட்டின் உற்பத்தி விலை 6 ரூபாயாக உள்ளது. இதனை வழக்கமாக 8 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். ஆனால் சில போலி இணையதளங்களில் அதன் விலையை 3 ரூபாய் அல்லது 2 ரூபாய் என்று ஏமாற்றுவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் பட்டாசு விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் அளவை சரியாக அனுப்புவதில்லை. அதன் பிறகு விற்பனையாளரை தொடர்பு கொள்ள நினைத்தாலும் அவர்களுடைய காண்டெக்ட் விவரங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதில்லை. இதுபோன்ற மோசடி செய்பவர்கள் மீது அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மோசடி செய்பவர்களின் வருகையால் சிவகாசியில் பட்டாசு வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கடைகளை நேரில் சென்று பார்வையிட்டு சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு இரையாகாமல் இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு பட்டாசு தொடர்பாக சுமார் 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் பட்டாசுகளை விற்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு தமிழ்நாடு பட்டாசு வணிகர்களுக்கு கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தங்கள் சங்கத்தின் கீழ் உள்ள கடை உரிமையாளர்கள் ஆன்லைனில் பட்டாசுகளை விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications