கூகுள் முதல் ட்விட்டர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் தான்.. புகழ்ந்து தள்ளிய எலான் மஸ்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்துள்ளது ட்விட்டரின் அறிவிப்பு. சர்வதேச நாடுகளில் ட்விட்டர் பிரபலமான சமூக வலைதளமாக இருந்து வருகின்றது.

Twitter CEO பதவியை Jack Dorsey ராஜினாமா செய்தது ஏன்? | Oneindia Tamil
 

இந்த ட்விட்டரில் கிட்டதட்ட 16 ஆண்டுகளாக பணியாற்றி படிப்படியாக முன்னேறி கடந்த 2016ம் ஆண்டில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகரியாக பொறுப்பேற்றார் ஜேட் டோர்சி. இப்படி ஒருவர் தான் ட்விட்டரில் இருந்து பதவி விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துள்ளது.

இவருக்கு பதிலாக இனி ட்விட்டரை நிர்வகிக்கபோவது ஒரு இந்தியர் என்பது தான், உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பதவி விலகலுக்கு காரணம்

பதவி விலகலுக்கு காரணம்

டோர்சி பதவி விலகியதற்கு மூன்று காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதில் முதல் காரணமே அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அது பரக் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு சரியான தேர்வு என உணர்ந்தேன். இரண்டாவது குழுவின் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொள்வது பிரெட் டெலர் ஏற்றுக் கொள்வது சரியான முடிவு. மூன்றாவது ட்விட்டர் குழுவாகிய நீங்கள் எல்லோரும் தான் என கூறியுள்ளார்.

இந்தியர்களே CEO-க்கள்

இந்தியர்களே CEO-க்கள்

உலகின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக இன்று டிஜிட்டல் துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப், விஎம்வேர் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தியர்கள் தான் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியரே நியமிக்கப்பட்டுள்ளார்.

திறன் மிக்கவர்களை தக்க வைத்தல்
 

திறன் மிக்கவர்களை தக்க வைத்தல்

இப்படி தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு என்பது மிகப்பெரியது. இதனால் திறன்மிக்க வெளி நாட்டினரை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்கிறது. இந்திய திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது என்றும் எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

யார் இந்த பரக் அக்ராவல்

யார் இந்த பரக் அக்ராவல்

பரக் அக்ராவல் இந்தியாவில் ஐஐடி மும்பையில் இளங்கலை படித்தவர், அமெரிக்காவின் ஸ்டோன்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 2011ம் ஆண்டில் ட்விட்டரில் தனது பணியினை தொடங்கிய பரக், இன்று தனது திறமையால் தலைமை செயல் அதிகாரியாக முன்னேறியுள்ளார்.

கூகுளின் சிஈஓ சுந்தர் பிச்சை

கூகுளின் சிஈஓ சுந்தர் பிச்சை

உலகின் டெக் ஜாம்பவான்களில் ஒருவரான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த சுந்தர் படித்தது சென்னையில். இன்று கூகுள், ஆல்பாபெட் நிறுவனங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டில் ஆல்பாஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

யார் இந்த சத்ய நாதெள்ளா

யார் இந்த சத்ய நாதெள்ளா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்ய நாதெள்ளா, ஹைத்ராபாத்தில் பிறந்தவர். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் கடந்த 2014ம் ஆண்டில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், கடந்த ஜூன் மாதமே தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

ஐபிஎம்மின் அர்விந்த் கிருஷ்ணா

ஐபிஎம்மின் அர்விந்த் கிருஷ்ணா

ஏப்ரல் 2020ம் ஆண்டு முதல் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் அர்விந்த் கிருஷ்ணா, ஆந்திராவில் பிறந்தவர். இவர் 1990ல் இருந்து தனது பணியினை ஐபிஎம்மில் தொடங்கினார். படிப்படியான முன்னேற்றம் கண்டு இன்று தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

யார் இந்த சாந்தணு நாராயண்

யார் இந்த சாந்தணு நாராயண்

அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சாந்தணு நாராயண், இவர் ஹைத்ராபாத்தில் பிறந்தவர். உஸ்மானியா பல்கலைகழகத்தில் இளங்கலை படித்த சாந்தணு, அமெரிக்காவில் முதுகலை படிப்பினை பெற்றார்.

தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Six global tech giants run by CEOs who grow up in India, US benefits gratly from Indian talents

Six global tech giants run by CEOs who grow up in India, US benefits gratly from Indian talents/ கூகுள் முதல் ட்விட்டர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் தான்.. புகழ்ந்து தள்ளிய எலான் மஸ்க்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X