வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. 5 நாளில் ரூ.59,437 கோடி.. முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட் தான்..!

நடப்பு வாரத்தில் இந்திய பங்கு சந்தைகள் ஆரம்பத்தில் சரிவில் தொடங்கினாலும், பிற்பாதியில் மீண்டும் உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் சிறந்த 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, பலத்த ஏற்றத்தினால் 1,18,383.07 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இதில் வழக்கம்போல முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.

இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 619.07 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.03% ஏற்றம் கண்டு காணப்பட்டது. இது நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, கடந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவும் இருந்தது.

டாப் 10 நிறுவனங்கள் எது?

டாப் 10 நிறுவனங்கள் எது?

இதற்கிடையில் சிறந்த அதிக சந்தை மூலதனத்தினை கொண்ட 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் கெயினர்களாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்டவை லூசர்களாகவும் உள்ளன.

டாப் கெயினராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாப் கெயினராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் டாப் கெயினராக உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 59,437.12 கோடி ரூபாய் அதிகரித்து, 16,44.511.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த அமர்வில் மட்டும், இதன் பங்கு விலையானது 1.51% அதிகரித்து, 2,593.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு

ஐடி துறையில் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 29,690.9 கோடி ரூபாய் அதிகரித்து, 7,48,580.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.71% அதிகரித்து, 1,780.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு


தனியார் நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 17,187 கோடி ரூபாய் அதிகரித்து, 5,41,557.77 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி-யின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.88% அதிகரித்து, 2,992.65 ரூபாயாக உள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 5,715.04 கோடி ரூபாய் அதிகரித்து, 13,03,730.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில், 37.85 ரூபாய் அதிகரித்து, 3,525.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி சந்தை மூலதனம் 3,301.84 கோடி ரூபாய் அதிகரித்து, 4,11,183.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 20.60 ரூபாயாக அதிகரித்து, 2,074.70 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு

தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 3,051.17 கோடி ரூபாய் அதிகரித்து, 4,57,355.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.70% அதிகரித்து, 7,579.10 ரூபாயாக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு

முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 22,545.39 கோடி ரூபாய் குறைந்து, 8,60,436.44 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.30% அதிகரித்து, 1,553 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம், 17,135.26 கோடி ரூபாய் அதிகரித்து, 4,56,270.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த அமர்வில் எஸ்பிஐ-யின் பங்கு விலையானது, சற்று அதிகரித்து, 511.35 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3,912.07 கோடி ரூபாய் அதிகரித்து, 5,65,546.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 1.21% அதிகரித்து, 2,404.95 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 3,810.99 கோடி ரூபாய் குறைந்து, 5,39,016.40 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த அமர்வில், சற்று அதிகரித்து, 776.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியல்

அதுவும் சந்தை மதிப்புடைய நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸை தொடர்ந்து இரண்டாவதாக டிசிஎஸ் நிறுவனமும், மூன்றாவதாக ஹெச்டிஎஃப்சி வங்கியும், இதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்டவை அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+