சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி காலத்தில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு மத்தியில் முக்கிய முதலீட்டுத் தேர்வாக உள்ளது. இதைப் பயன்படுத்து மத்திய அரசு பல அரசு நிறுவனங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மட்டும் அல்லாமல் பல அரசு நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்து நிதியைத் திரட்டி வருகிறது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் ஆகஸ்ட் 30ஆம் தேதி சத்தமில்லாமல் நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஆகஸ்ட் 30 அன்று 'நவரத்னா' அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது. நவரத்னா என்பது சிறந்த நிதியியல் மற்றும் சந்தை வர்த்தகம் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் அங்கீகாரம்.

அந்த வகையில் மத்திய நிதியமைச்சகம் SJVN, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன், NHPC மற்றும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஆகஸ்ட் 30 அன்று 'நவரத்னா' அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் உள்ள நான்கு புதிய நவரத்னா நிறுவனங்களில் மூன்று ரெயில்டெல், SJVN மற்றும் NHPC ஆகியவை பங்குச்சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளன.
ரெயில்டெல் மற்றும் SJVN பங்குகள் செப்டம்பர் 2 அன்று வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தாலும், தற்போது 2 சதவீத உயர்வில் வர்த்தகமாகி வருகிறது. இந்த 3 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பெரும் நன்மை அளிக்க கூடியது.
மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மஹாரத்னா நிறுவனங்கள், நவரத்னா நிறுவனங்கள் மற்றும் மினிரத்னா நிறுவனங்கள் என மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. நவரத்னா அந்தஸ்து, முன்னதாக 'மினி ரத்னா' வகை I இல் வகைப்படுத்தப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இது அவற்றின் வலுவான நிதி மற்றும் சந்தை செயல்திறனை அங்கீகரித்து வழங்கப்படும் ஒரு முக்கியமான அங்கீகாரம்.
நவரத்னா நிறுவனங்கள் அரசின் முன் அனுமதியின்றி ரூ.1,000 கோடி வரை முதலீடு செய்ய முடியும். இதேபோல் நவரத்னா என அங்கீகாரம் கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு சுமார் 15 சதவீதம் அல்லது முழு ஆண்டிற்கு அவற்றின் நிகர மதிப்பில் 30 சதவீதத்தை ஒதுக்கலாம், இது இரண்டு பிரிவிலும் ரூ.1,000 கோடி வரம்பிற்குள் இருக்க வேண்டும், அதிகமாக இருந்தால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும்.
மத்திய அரசு கடைசியாகக் கப்பல் கட்டுமான நிறுவனமான மசகோன் டாக் தான் மத்திய அரசு கடைசியாக நவரத்னா அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இதை தொடர்ந்து தற்போது SJVN, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன், NHPC மற்றும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களை 22வது, 23வது, 24வது மற்றும் 25வது நவரத்னா அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜூன் காலாண்டில், ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வின் நிகர லாபம் 25.2 சதவீத அதிகரித்து 48.7 கோடி ரூபாயாக உயர்ந்தது. SJVN இன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 31 சதவீதம் உயர்ந்து 357.09 கோடி ரூபாயாக அதிகரித்ததுள்ளது. மேலும் NHPC இன் நிகர லாபம் 1.2 சதவீதம் உயர்ந்து ரூ. 1,108.5 கோடியாக உயர்ந்தது.


Click it and Unblock the Notifications