அமெரிக்க அரசின் உயர் அதிகாரியான 5 நாள் பயணத்தில் உஸ்பெக்கிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மதியம் இந்தியா வந்த நிலையில், டெல்லி-க்கு செல்லாமல் நேற்று மாலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைச் சந்தித்து இரு நாடுகள் மத்தியிலான FTA ஒப்பந்தம், விசா கட்டுப்பாடுகள் குறித்து சுமார் 1 மணிநேரத்திற்கும் அதிகமாகப் பேசிய நிலையில் இன்று முழுக்க முழக்கக் குஜராத் ஜாம்நகரில் முகேஷ் அம்பானி உடன் ஆலோசனை செய்ய உள்ளார் மார்கோ ரூபியோ.
டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கத் திட்டமிடாத மார்கோ ரூபியோ குஜராத் மாநிலத்தின் ஜாம்நகருக்கு செல்ல என்ன காரணம்..?

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு அடுத்த 2 வாரத்தில் மிட்டேர்ம் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வேளையில், டீசல் சப்ளையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தால் அமெரிக்காவில் 6 டாலருக்கு மேல் உயர்ந்துள்ள டீசல் விலை அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.
இந்த பிரச்சனையைச் சரி செய்யும் விதமாக உலகில் பல நாடுகளில் இருந்து டீசல் சப்ளையை அதிகரிக்க அமெரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக மார்கோ ரூபியோ குஜராத் ஜாம்நகரில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் முகேஷ் அம்பானியை சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவுக்கு எப்படி முகேஷ் அம்பானி இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவும்..?
இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க ராணுவம் வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மன்ரோவை கைது செய்த நிலையில் அந்நாட்டில் உருவாகியுள்ள இடைக்கால அரசு மூலம் வெனிசுலா எண்ணெய் வயல்களை பெரிய அளவில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக அமெரிக்கா மற்றும் வெனிசுலா நிறுவனங்களின் கூட்டணியில் உருவான North American Blue Energy Partners என்ற தனியார் நிறுவனத்திற்கு 17 எண்ணெய் வயல்களை சுமார் 100 வருடத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
ஆனால் இந்த கச்சா எண்ணெய் heavy crude பிரிவில் வரும் காரணத்தால் பல வருடங்களாகச் செயல்படாமல் இருக்கும் வெனிசுலா சுத்திகரிப்பு ஆலையிலும், அமெரிக்காவிலும் பயன்படுத்த முடியாத காரணத்தால் முகேஷே் அம்பானியின் உதவியை நாடி வந்துள்ளார் மார்கோ ரூபியோ.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல வருடங்களாக வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரிப்பு செய்யும் அனுபவத்தையும், கட்டமைப்பையும் வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இன்றளவும் வெனிசுலா எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா அரசிடம் இருந்து முகேஷ் அம்பானி தனிப்பட்ட உரிமத்தை வைத்துள்ளார்.
குஜராத் ஜாம்நகரில் இருக்கும் 2 மாபெரும் சுத்திகரிப்பு ஆலையில் தினமும் 14 லட்சம் வெனிசுலா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் செய்யும் திறன் கொண்டு உள்ளது. இந்த நிலையில் இன்று நடந்து வரும் முகேஷ் அம்பானி - மார்க் ரூபியோ மத்தியிலான சந்திப்பும் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதலாக வெனிசுலா எண்ணெய் சப்ளை, மொத்த டீசல் சப்ளையும் அமெரிக்காவுக்கு, இதற்காக ஸ்பெஷல் விலை எனப் பலவற்றைக் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.
இதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் தான் மத்திய அரசு அமெரிக்காவுக்கும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கும் சாதகமாக பெட்ரோல் ஏற்றுமதிக்கான விண்ட்பால் வரியை உயர்த்திவிட்டு, டீசல் மீதான வரியைக் குறைத்தது. இன்றைய கூட்டம் முகேஷ் அம்பானிக்கு உண்மையில் பெரும் ஜாக்பாட் ஆக இருக்கப்போகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications


