பொதுவாக சோஷியல் மீடியா கிரியேட்டர்கள், இன்ப்ளூயன்சர்கள் தான் ஒரு பாட்டு டிரெண்டாகி விட்டால், அதையே பயன்படுத்தி ரீல்ஸ் போடுவது, கன்டென்ட் செய்வது என நடக்கும். ஆனால் இப்போது கார்ப்ரேட் நிறுவனங்கள் ஒரு சோஷியல் மீடியா டிரெண்ட்-ஐ உருவாக்கியுள்ளனர். இது தான் மன்னிப்பு கேட்டும் டிரெண்ட்.
இந்திய சமூக ஊடகங்களில் ஸ்கோடா, டி-சீரிஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் முதல் அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட் வரையில் பல முன்னணி பிராண்டுகளும், நிறுவனங்களும் நகைச்சுவையாக வாடிக்கையாளர்களிடம் "மன்னிப்பு" பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மன்னிப்பு கடிதம் எப்படி இருக்கிறது என்றால் எங்கள் தயாரிப்புகள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருப்பதாலும், தரமானதாக இருப்பதாலும் "வருந்துகிறோம்" என்று விளையாட்டுத்தனமாக இந்த மன்னிப்பு கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த மன்னிப்பு நிறுவனம் செய்த தவறுக்கானது அல்ல, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையிலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற தொனியில் பல நிறுவனங்கள் இத்தகைய மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டு வருகிறது.
இது உலகளாவிய டிரெண்ட் முதலில் இது பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடங்கி தற்போது இந்தியாவில் பரவியது. இந்தியாவில் முதல் முறையாக இந்த டிரெண்ட் உருவாக காரணம் ஸ்கோடா தான். இந்த டிரெண்டில் உங்கள் ஒன்இந்தியா குழுமம் இணைந்துள்ளது.
ஸ்கோடா இந்தியா தொடக்கம்
ஸ்கோடா இந்தியா நவம்பர் 5ஆம் தேதி இந்த டிரெண்டை தொடங்கியது. தங்கள் கார்கள் ஓட்டுவதில் வாடிக்கையாளர்கள் அதிகம் மகிழ்ச்சியடைந்து வழி மாறி நீண்ட தூரம் செல்வதால் "மன்னிப்பு" கோரியது. இது அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் லெட்டர் பேட் வடிவில் வெளியிடப்பட்டால் பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் மற்ற நிறுவனங்களும் இதை பாலோ செய்து விரைவில் வைரலானது.
பிற பிராண்டுகள் பங்களிப்பு
ஸ்கோடா இந்தியா-வை தொடர்ந்து ஹாஜ்மோலா, வோக்ஸ்வாகன் இந்தியா, டி-சீரிஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், அதானி அம்புஜா சிமெண்ட், ஹல்திராம், கிங்பிஷர், டிவிஎஸ், ஸ்டார் மூவிஸ், பெப்பர்ஃபரை, Z5, வாரீ, பார்சூன் சமையல் எண்ணெய், கிளியர் பேகேஜ் வாட்டர், டாபர், வாடிலால் ஐஸ்கிரீம், மில்க் பேஸ்கட், பூமர், ரிலையன்ஸ் பேஷன் பேக்டரி போன்ற பல நிறுவனங்கள் இந்த டிரெண்டில் இணைந்துள்ளன.
அம்புஜா சிமெண்ட்
அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட், தங்கள் சிமெண்ட் மிகவும் வலிமையானதால் சுவரில் துளையிட முடியாத அளவுக்கு இருப்பதால் நகைச்சுவையாக மன்னிப்பு கோரியது. இதை கார்ப்ரேட் மொழியில் மிகவும் சீரியஸான முறையில் தெரிவித்தது மூலம் பலரையும் கவர்ந்துள்ளது அம்புஜா சிமெண்ட்.
உலகளாவிய டிரெண்ட்
இந்த டிரெண்ட் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது உலகளாவிய டிரெண்டாக மாறியுள்ளகு. பிராண்டுகள் தங்கள் வலிமையை கவரும் படியும், அதேநேரத்தில் நகைச்சுவையாக வெளிப்படுத்துகின்றன. இது வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் நாம் நல்ல சேவை அல்லது பொருளை தான் பயன்படுத்துகிறோம் என நம்பிக்கையையும், திருப்தியையும் அளிக்கும். இது சமூக ஊடகத்தில் பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications