குருகிராம்: இந்தியாவில் தற்போது டோர் டெலிவரி துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஸ்கை ஏர் (Skye Air) என்ற நிறுவனம் ட்ரோன்கள் வழியாக மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் வேலையை தொடங்கியுள்ளது.
குறிப்பாக குருகிராம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்நிறுவனம் ட்ரோன்கள் வாயிலாக மருந்துகள் மற்றும் மளிகை சாமான்களை டெலிவரி செய்து வருகிறது.

தாங்கள் ஆர்டர் செய்த பொருள் ட்ரோன்கள் மூலம் உடனே தங்களை வந்து சேர்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில பொருட்கள் தாங்கள் ஏர்டர் செய்த சில நிமிடங்களிலேயே தங்களிடம் வந்து சேர்ந்து விடுகிறது என வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்கை ஏர் நிறுவனம் இதற்காக ஈகாமர்ஸ் தளங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர் ஒரு பொருளை ஏர்டர் செய்த உடன் , இவர்களுக்கும் அந்த தகவல் வந்துவிடும். உடனே டெலிவரி மையத்தில் இருக்கும் ட்ரோனுக்கு இந்தகட்டளை அனுப்பப்படும்.
டெலிவரி மையத்தில் இருப்பவர்கள் கண்டெய்னரில் பொருட்களை வைத்து ட்ரோனில் இணைத்துவிட்டால் போது அது குறிப்பிட்ட முகவரிக்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிடும். ஸ்கை ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அங்கீத் குமார் 2019 ஆம் ஆண்டில் இரண்டு ட்ரோளை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வாறு பொருட்களை டெலிவரி செய்யும் பணியை தான் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.
அரசின் ஆதரவுடன் குருகுராம் பகுதியில் முதன்முறையாக இந்த ட்ரோன் டெலிவரி சேவையை தான் தொடங்கியதாகவும். தற்போது கிட்டத்தட்ட 30 ட்ரோன்களை கொண்டு குரு கிராமில் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்த சேவை விரிவு படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப் பாங்கான பகுதிகளில் உள்ள கிராமங்களில் மருத்துவம் சார்ந்த பொருட்களை எந்த சிரமமும் இன்றி உடனடியாக கொண்டு சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு நிறுவனத்தையே தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த 18 முதல் 24 மாதங்களில் தங்களது நிறுவனம் 100 ட்ரோன்களை கொண்டு செயல்பட இருப்பதாக இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அங்கீத் குமார் தெரிவிக்கிறார். வேகமான காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் காலங்களில் தாங்கள் ட்ரோன்களை இயக்குவது இல்லை என அவர் கூறுகிறார்.
தற்போதைக்கு தங்களது நிறுவனம் 33 கோடி நிதி திரட்டி இருப்பதாக கூறும் அவர், பாட்னா, நாகாலாந்து, இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களது நிறுவனம் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் பணியை துவங்கியுள்ளதாக கூறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications