டெல்லி: சில நாட்களாக தொடர்ந்து பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த செய்தியை நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அந்த வகையில், ஒருவர் தன்னுடைய மகனின் ப்ளே ஸ்கூல் கட்டணம் அதிகமாக உள்ளதாகக் கூறி, தனது கவலையை X (ட்விட்டர்) பிளாட்ஃபார்மில் பகிர்ந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த இவர், தன்னுடைய மகனின் ஒரு வருட ப்ளே ஸ்கூல் கட்டணம், தான் ஒட்டுமொத்த கல்விக்காக செலவு செய்த தொகையை விட அதிகமாக உள்ளது என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அவர் ஷேர் செய்ததிலிருந்து, அவரது போஸ்ட் இன்டர்நெட்டில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஆகாஷ் குமார் பங்குச்சந்தை வர்த்தகராகவும், கணக்காளராகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கமான X பிளாட்பார்மில், தன் மகனின் ப்ளே ஸ்கூல் கட்டண ரசீதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய மகனின் ஒரு வருட பள்ளிக் கட்டணம், தான் படிப்பிற்கு செலவு செய்த ஒட்டுமொத்த கல்விச் செலவை விட அதிகமாக உள்ளது என்று பகிர்ந்து உள்ளார்.
அந்த ஸ்கிரீன்ஷாட்டில் 2024 முதல் 2025 வரையிலான கல்வி ஆண்டில் ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ. 10,000, ஒரு ஆண்டு கட்டணமாக ரூ. 25,000 வசூலிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான டேர்ம் 1 கட்டணமாக ரூ. 98,750 ரூபாய், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான டேர்ம் 2 கட்டணமாக ரூ. 98,750 ரூபாய், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான டேர்ம் 3 கட்டணமாக ரூ. 98,750 ரூபாய் மற்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான டெர்ம் 4 கட்டணமாக ரூ. 98,750 ரூபாய் கட்ட வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் 2024 முதல் 2025-ஆம் கல்வியாண்டில் ரூ. 4,30,000 ஆயிரம் ரூபாய் தன் மகனுக்காக செலவழிக்கிறார் என்பது தெரியவருகிறது.
இந்த போஸ்டை அவர் பகிர்ந்ததிலிருந்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒருவர், இந்த பள்ளி கட்டணம் தரமான கல்விக்கு வழிவகுக்குமா? இதனால் குழந்தைகள் வளர்ப்பதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்று கேட்டுள்ளார். மேலும் ஒருவர் இவர் ட்விட்டரில் பிரபலம் அடைவதற்காக இத்தகைய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிடுகிறார். இது உண்மை என்றால் எக்ஸெல் சீட்டில் இருந்து ஸ்கிரீன்ஷாட்டை அவர் ஏன் பதிவிட்டிருக்க வேண்டும் மாறாக, ப்ளே ஸ்கூலின் பெயரை அல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு பயனர் நாம் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்று வரை கல்வி முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், பாடத்திட்டங்கள் மற்றும் புத்தகங்களை மட்டுமே மாற்றுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளை சீர்திருத்த யாரும் முன் வருவதில்லை. பெரும்பாலும் இவ்வாறு கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைச்சர்களால் நடத்தப்படுகின்றன என்று பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications