உலகளவில் தூக்கமின்மை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பணிச்சுமை, சொந்த வாழ்க்கையில் இருக்கும் அழுத்தங்கள், நிதி சார்ந்த சிக்கல்கள், நம்முடைய வாழ்க்கை முறை , உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஸ்மார்ட்போன்கள் என பல விஷயங்கள் தூக்கமின்மை பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த தூக்கமின்மை பிரச்சினை தற்போது தம்பதிகள் இடையே ஒரு வித பிரிவை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. பெரும்பாலான இந்திய தம்பதிகள் தனித்தனியாக உறங்குவதையே விரும்புகிறார்கள். நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பதே இதற்கு காரணமாக இருக்கிறதாம்.

பெரும்பாலான வீடுகளில் கணவன் , மனைவி என இருவரும் வேலைக்கு செல்கின்றனர். வேலையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வேண்டும் என நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார்கள். இதனால் வீட்டுக்கு வரும்போதே மனச்சோர்வுடன் தான் வருகின்றனர். சில தம்பதிகளுக்கு கணவருக்கு ஒரு ஷிப்ட், மனைவிக்கு ஒரு ஷிப்ட் என மாறி அமைந்துவிடும். எனவே நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக கணவன் மனைவி இரவில் தனித்தனியாக உறங்கவே விரும்புகிறார்களாம். இதனை ஆங்கிலத்தில் Sleep Divorce என அழைக்கின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான Global sleep survey என்ற ஆய்வறிக்கை இந்தியாவில் Sleep divorce என்ற போக்கு தம்பதிகள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறுகிறது. இந்தியாவை சேர்ந்த 70 சதவீததுக்கும் அதிகமான தம்பதிகள் தனித்தனியாக படுத்து உறங்குவதையே விரும்புகிறார்கள் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பகல் முழுவதும் பல்வேறு மன அழுத்தங்களுடனும் பரபரப்புகளுடனும் இருப்பதால் அமைதியான தரமான தூக்கம் வேண்டும் என்பதற்காக துணையைப் பிரிந்து உறங்குவதாக பதில் அளித்திருக்கிறார்களாம். இதன் மூலம் தங்களின் தூக்கத்தின் தரம் உயர்ந்திருப்பதாக பலரும் கூறுகிறார்களாம்.
தனித்தனியே பிரிந்து படுப்பதற்கு கணவர் குறட்டை விடுவது , சத்தமாக மூச்சு விடுவது, இருவரும் வெவ்வேறு ஷிப்டுகளில் வேலைக்கு சென்று விட்டு வெவ்வேறு சமயங்களில் தூங்க செல்வது , போன் பார்ப்பது உள்ளிட்டவற்றையும் காரணமாக கூறியுள்ளனர்.
இந்தியாவில் 13 நகரங்களை சேர்ந்த 30,000 தம்பதிகளிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதுவே அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 சதவீத தம்பதிகள் எப்பொழுதும் சேர்ந்தே உறங்குவதாகவும், 50 சதவீத தம்பதிகள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள் மட்டும் தனித்தனியே உறங்குகிறோம் என்றும் பதிலளித்திருக்கிறார்களாம்.
இருந்தாலும் நிபுணர்கள் தம்பதிகள் இப்படி தனித்தனியே உறங்குவது ஆபத்தான போக்கு என கூறுகின்றனர். தம்பதிகள் சேர்ந்து உறங்கும் போது அவர்களுக்கிடையே லவ் ஹார்மோனான oxytocin சுரக்கும். நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, பதற்றம் , கவலை உள்ளிட்டவற்றை குறைக்கும் தன்மை கொண்டது இந்த ஹார்மோன்.
தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம், அதற்காக தம்பதிகள் தனித்தனியே உறங்க முடிவு செய்வது தற்காலிகமான தீர்வாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து சரி செய்யவே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications