நீங்கள் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவராக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். பயணிகளின் வசதிக்கு ஏற்றபடி இந்திய ரயில்வே அவ்வப்போது சில விதிகளை அமல்படுத்தி வருகிறது.
அதுபோல் அண்மையில் ரயிலில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்களில் பயணிப்பவர்களுக்கான விதியை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. அதன்படி பயணிகளின் தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பயணிகள் 9 மணிநேரம் வரை பயணத்தின்போது தூங்கலாம். இப்போது அந்த நேரம் 8 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான் இனி தூங்க முடியும். இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை தூங்கலாம்.
படுக்கை வசதி உள்ள அனைத்து ரயில்களிலும் இந்த விதி அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நீண்ட தொலைவு பயணிக்கும் பயணிகள் வசதியாக செல்லலாம் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது.
ரயில்வேயின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவது நல்ல சமயம் எனக் கருதப்படுகிறது. இந்த விதி அமலாவதற்கு முன்பாக மிடில் பெர்த்தில் படுத்திருக்கும் பயணிகள் இரவில் மிக சீக்கிரமாக தூங்கிவிடுவதாகவும் காலையில் மிகவும் தாமதமாக எழுகின்றனர் என்று புகார்கள் குவிந்தன.
இதனால் லோயர் பெர்த்தில் பயணிப்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. பல நேரங்களில் பயணிகள் இடையே இதனால் தகராறுகள் எழுந்துள்ளன.
இப்போது புதிய விதியின்படி படுக்கை நேரம் நிர்ணயிக்கப்பட்டதால் எப்படியிருந்தாலும் காலை 6 மணிக்கு எழுந்து விட வேண்டும்.
மிடில் பெர்த் வைத்திருப்பவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். காலை 6 மணிக்கு மிடில் பெர்த்தை இறக்கிவிட வேண்டும். அதன் பின்னர் லோயர் சீட்டில் உட்கார்ந்து செல்ல வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய விதியின்படி இரவு 10 மணிக்கு முன்பாக ரிசர்வ் செய்த பெட்டியில் தூங்க முடியாது. காலை 6 மணிக்கு மேல் தூங்க முடியாது. யாராவது இந்த விதியை மீறினால் இதுபற்றி ரயில்வேக்கு புகார் செய்யலாம்.
Story written by: Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications