கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலா பகுதியில், Slice நிறுவனம் தனது முதல் UPI வங்கிக் கிளையும், ஏடிஎம் வசதியையும் நிறுவியுள்ளது. இதனுடம் யுபிஐ கிரெடிட் கார்டையும் அறிமுகம் செய்துள்ளது. Slice நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கிரெடிட் கார்டு, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது. இந்த கார்டு, சாதாரண யுபிஐ பரிமாற்றங்களைப் போலவே இயல்பாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் கிரெடிட் வசதியை அனுபவிக்க ஆவணங்கள், மறைமுகக் கட்டணங்கள் போன்ற சிக்கலின்றி, யுபிஐ பேமெண்ட் போல் பயன்படுத்தலாம்.
மேலும், QR கோடுகள் ஸ்கேன் செய்யலாம் அல்லது யுபிஐ மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். இதில், செலவு செய்த தொகை உங்களின் கிரெடிட் வரம்பில் இருந்து நேரடியாக எடுக்கப்படும். இதைச் செயல்படுத்த வேறு எந்த வங்கி செயலியும் தேவையில்லை. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், அனைத்து செலவுகளிலும் அதிகபட்சம் 3% வரை கேஷ்பேக் (Cashback) கிடைக்கும். மேலும், Slice in 3 எனும் புதிய வசதி மூலம், உடனடியாக உங்கள் செலவுகளை 3 கட்ட interest-free தவணைகளாக (EMI) மாற்றிக்கொள்ளலாம்.

தற்போது, 400 மில்லியனுக்கும் (40 கோடிக்கும்) மேற்பட்ட இந்தியர்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிமாற்றங்கள் ஆனதின் மூலம், அதிகமான மக்கள் கிரெடிட் பெறத் தகுதி பெறுகிறார்கள். ஆனால், Slice Super Card இத்தகைய பயனாளர்களுக்கான அடுத்த படியாக அமைகிறது. அவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகளை உபயோகப்படுத்தும் அதே எளிமையில், கிரெடிட் வசதியையும் அனுபவிக்க முடியும்.
Slice நிறுவனத்தின் வங்கி மற்றும் கிரெடிட் சேவைகள் தொடர்பான புதிய முயற்சிகள் குறித்து அந்நிறுவனத்தின் மாநில இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (MD & CEO) சதீஷ் குமார் கல்ரா கூறுகையில், "இதை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனது 40 ஆண்டுகால வங்கி அனுபவத்தில் பல முக்கிய தருணங்களை பார்த்துள்ளேன். ஆனால் இந்தியா வங்கி மற்றும் நிதி சேவைகளை பார்ப்பது முற்றிலும் மாறும். இந்தப் புதிய புரட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வங்கி சேவையை நாம் முற்றிலும் புதிதாக சிந்தித்து உருவாக்கி வருகிறோம். இதில் தொழில்நுட்பம், எளிமை மற்றும் நம்பிக்கை மூன்றும் ஒன்றாக சேர்ந்து, ஒவ்வொரு இந்தியருக்கும் பயன்படும் ஒரு புதிய அமைப்பை உருவாக்குகிறோம். இந்தியாவில் யுபிஐ மூலம் கிரெடிட் வழங்குவது, நாட்டு மக்களுக்கு நிதி சேவைகளை அணுக எளிதாகும் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். இதைச் சாதிக்க சிறந்த வழி - முழு வங்கி அமைப்பையும் இந்த யுபிஐ கிரெடிட் மாடலுக்கு தழுவச் செய்ய வேண்டும். இது வங்கி உலகத்தில் வரும் மிகப்பெரிய மாற்றங்களுக்கான முதல் படியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
பல ஃபின்டெக் நிறுவனங்கள் வங்கி சேவையை நடத்த பெரிய வங்கிகளை (third-party banking partners) பயன்படுத்தி வேலை செய்கின்றன. இதனால் அவர்கள் சேவை கட்டுப்பாடு, வேகம் மற்றும் நம்பகத்தன்மை குறைவு ஏற்படுகிறது. ஆனால், Slice நிறுவனம் தனது சொந்த வங்கி அமைப்பை கொண்டுள்ளது. கடன் அளிக்கும் திறனை தானே கையாளுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வேகமான, நம்பகமான, ஒருங்கிணைந்த வங்கி சேவை கிடைக்கிறது.
இந்த வங்கி, முதலில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது பெங்களூருவில் கிளையைத் தொடங்கி, உலகளாவிய வளர்ச்சியும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications