கர்நாடகா-வின் தலையெழுத்தை மாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா.. ஐடி முதல் பயோடெக் வரை..!

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று சில நாட்கள் ஆகிறது என்று கூறினார். அரசியலில் இருப்பவர்களுக்கு யாரும் ஓய்வூதியம் கொடுப்பதில்லை, எனக்கு ஏற்கனவே 90 வயது, 90 களில் நாம் 50 களில் பணியாற்றியதை போல் இயங்க முடியாது. வயதின் காரணமாக அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கி இருப்பதாக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

யார் இந்த எஸ்.எம். கிருஷ்ணா..? இவர் சாதித்தது என்ன..?

எஸ்.எம்.கிருஷ்ணா

எஸ்.எம்.கிருஷ்ணா

எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவேரி நிதியின் முக்கியப் பகுதியாக விளங்கும் சோமனஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர். மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், அப்போது பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி சட்ட பிரிவில் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா

அமெரிக்கா

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் Southern Methodist University மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது கல்வி சாதனைக்காக அவர் கர்நாடகா மற்றும் அவரது சொந்த ஊரான சோமனஹள்ளி-யில் அவரை "ஆக்ஸ்போர்டு கிருஷ்ணா" என்று அழைக்கப்பட்டார்.

வணிக அணுகுமுறை

வணிக அணுகுமுறை

எஸ்.எம்.கிருஷ்ணா அதிகம் படித்தால் என்னவோ அரசியலையும் வணிக அணுகுமுறை கொண்ட ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா -வும் ஆந்திர மாநிலத்தின் அப்போதைய முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு உடன் பல முறை ஒப்பிட்டுப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 பெங்களூர்

பெங்களூர்

எஸ்.எம்.கிருஷ்ணா புதிய தொழில்நுட்பம் மற்றும் cutting-edge innovative தீர்வுகளைக் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் செயல்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடித்தார், மேலும் பெங்களூர் நகரம் உலக நாடுகளைக் கவரும் வண்ணம் வளர முக்கியக் காரணமாக இருந்த காரணத்தால் எஸ்.எம்.கிருஷ்ணா-வை visionary CM என அறிவித்தார்.

டெக் ஐகான்

டெக் ஐகான்

எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியாவின் டெக் ஐகான் ஆகக் கருதப்படும் அளவிற்கு, பெங்களூர் முழுவதும் சப்வே, மேம்பாலங்கள், கேபிள் பிரிட்ஜ் என அதிநவீன கட்டுமானங்களைக் கட்டமைக்க முக்கியக் காரணமாக இருந்தார்.

ஐடி சேவை

ஐடி சேவை

இது மட்டுமா பெங்களூரில் இன்று ஐடி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்க முக்கியக் காரணமாகப் பெங்களூரில் ஐடி இன்பராஸ்டக்சர் கட்டமைப்பை மேம்படுத்தினார். இதன் மூலம் இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் உருவாக அடித்தளமிடப்பட்டது.

பியோடெக், அரசு சேவையில் டெக்

பியோடெக், அரசு சேவையில் டெக்

இது மட்டுமா பியோடெக்னாலஜி துறையில் பிரம்மாண்ட நிறுவனமான பயோகான், பல அரசு அமைப்புகள், கல்லூரிகள் இவருடைய காலகட்டத்தில் அதிகமாகப் பெங்களூருக்கு வந்தது. இதேபோல் இந்தியாவில் முதல் மாநிலமாக அரசு சேவைகள், தரவுகள் அனைத்தும் இணைய வாயிலாக நிர்வாகம் செய்யும் கட்டமைப்பையும் இவருடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் அடித்தளமிடப்பட்டது.

GSDP-யில் செலவின அளவு

GSDP-யில் செலவின அளவு

இதோடு எஸ்.எம்.கிருஷ்ணா அரசு நிதித் துறையில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது மூலம் வளர்ச்சி விகிதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த மாற்றம் மூலம் கர்நாடக மாநிலத்தின் GSDP-யில் செலவின அளவு 23.3 சதவீதத்தில் இருந்து 19.45 சதவீதமாகக் குறைந்தது.

முக்கியப் பதவி

முக்கியப் பதவி

எஸ்.எம்.கிருஷ்ணா 1993-94 வரையில் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தார், 1999-2004 வரையில் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.2004-2008 வரையில் மகாராஷ்டிர மாநிலத்தின் கவரனராக இருந்தார். 2009-2012 வரையிலான காலகட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

படித்தவர்கள்

படித்தவர்கள்

எஸ்.எம்.கிருஷ்ணா அதிகம் படித்ததால் என்னவோ எப்போது பெங்களூரின் சிறந்த தொழிலதிபர்கள், படித்தவர்கள், படித்த செல்வாக்கு மிக்க நபர்கள், சிவில் சர்வீஸ் பிரிவு மூத்த அதிகாரிகள் உடனே எப்போதும் காணப்பட்டார். இவரது அணுகுமுறையும், கட்சியை வழிநடத்தும் மூளையும், 1999ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 2004 வரை கர்நாடகா மாநிலத்தின் அபிமான முதல்வராக இருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+