2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் கார் விற்பனை எண்ணிக்கையில் பெரும் சாதனை படைத்தாலும், அதில் பெரும்பங்கு எஸ்யூவி (SUV) கார்களுக்கே உரித்தாக இருந்தது. சிறிய ரக கார்கள் அதாவது ஹேட்ச்பேக் வகை கார்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.
இந்த சூழலில், மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பர்கவா அளித்த பேட்டி ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் கார் விரும்பிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் தற்போது SUV கார்களின் டிரெண்டாக உள்ளது, முன்பெல்லாம் மாதம் 10 -15 SUV கார்கள் விற்கப்படும் ஷோரூம்-ல் தற்போது விற்பனையாகும் 90 சதவீத கார்களும் SUV கார்களாக உள்ளது.
எஸ்யூவி கார்கள் என்பது அளவில் பெரியது, மைலேஜில் மேசமானது, இது இரண்டுமே இந்தியாவுக்குப் பிரச்சனை தான். ஏற்கனவே பெரு நகரங்களில் பார்கிங் பிரச்சனை தலைவிரித்தாடும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் எஸ்யூவி கார் என்றால் நினைத்து பாருங்க, அதேபோல் எஸ்யூவி கார் பயன்படுத்துவதால் கூடுதல் பெட்ரோல், டீசல் செலவாகிறது, இதுவும் இந்தியப் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.
இந்தியாவில் அடுத்த 5 வருடத்திற்குள் பார்கிங் பெரும் பிரச்சனையாக இருக்கும் பல ஆய்வுகள் கூறும் வேளையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பர்கவா அளித்த பேட்டி ஆட்டோமொபைல் துறையில் மீண்டும் ஒரு மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.சி.பர்கவா அளித்த பேட்டியில் சிறு கார்கள் மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் வருமானம் உயர்வு மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கார் வாங்குவதற்குத் தயாராவது ஆகிய இரு காரணங்களால் 2026-ம் ஆண்டிற்குள் சிறு கார்களின் விற்பனை மீண்டும் உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நேரடியாக நடுத்தர அளவிலான கார்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு மாறுவதாகக் கூறப்படும் சந்தை ஆய்வுகளை அவர் மறுத்துள்ளார். இதனால் மீண்டும் ஹேட்ச்பேக் டிரெண்ட் இந்தியாவில் உருவாகும் என்பதற்கான சிக்னலை கொடுத்துள்ளார். ஹேட்ச்பேக் கார்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
சிறு கார்கள் விற்பனை சரிவு: கடந்த நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை 8.7% வளர்ச்சி கண்ட நிலையில், சிறு கார்களின் விற்பனை 12% சரிவைக் கண்டது. எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்த தேவை இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
2018-ம் ஆண்டில் மொத்த கார் விற்பனையில் சிறு கார்களின் பங்கு 47.4% ஆக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் 34.4% ஆகவும், கடந்த நிதியாண்டில் 27.7% ஆகவும் குறைந்துள்ளது. சிறு கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் மாருதி சுசூகி என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு பாதிப்பு: கடந்த சில ஆண்டுகளில் ஆரம்ப நிலை வாகனங்களின் விலை உயர்வு, மக்களின் வருமானத்தை விட மிக வேகமாக அதிகரித்துள்ளது. இதுவே விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம் என்றும் பர்கவா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டிற்குள் இந்த விலை உயர்வின் தாக்கம் குறைந்து, குறிப்பிட்ட வருமானம் கொண்ட மக்களின் கொள்முதல் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை சரிவு கட்டுப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கையாக உள்ளார்.
நீங்க என்ன நினைக்கிறீங்க, எஸ்யூவி பெஸ்டா, ஹேட்ச்பேக் கார் பெஸ்டா..? கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications