சாமானிய மக்களின் முக்கிய முதலீட்டு திட்டங்களாக இருக்கும் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் டிசம்பர் 31, 2025 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் மறுஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த மறுஆய்வில் செய்யப்படும் மாற்றங்கள் தான் 2026ஆம் ஆண்டின் ஜனவரி -மார்ச் காலாண்டுக்கான வட்டி விகிதமாக இருக்கும்.
இந்த மறுஆய்வில் வட்டி குறைப்பிற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் சிறு சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த வட்டி விகிதம் மாற்றம் பிபிஎஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) போன்ற பில முக்கிய திட்டங்களுக்கு வரும்.

தற்போதைய வட்டி விகிதங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஆகியவற்றுக்கு தற்போது 8.2 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கிறது. இதேபோல் நீண்டகால சேமிப்பு திட்டமான பிபிஎஃப் திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீதம் வட்டி வருமானத்தை வழங்குகிறது.
ரெப்போ விகித குறைப்பு
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைய முக்கிய காரணம் 2025ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.25 சதவீதம் குறைத்ததால் வங்கி நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன. இதேபோல் நாட்டில் ரீடைல் பணவீக்க அளவும் கட்டுக்குள் உள்ளதால் தற்போது வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதை தாண்டி மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை கணக்கிடும் ஃபார்மூலா-வை பார்க்கும் போதும் வட்டி குறைப்புக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.
வட்டி விகிதம் நிர்ணய முறை
சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு, 2010ல் அமைக்கப்பட்ட ஷ்யாமளா கோபிநாத் குழு பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்து வருகிறது.
இக்குழுவின் பரிந்துரை படி அரசு பத்திரங்களின் (G-SEC) இரண்டாம் நிலை சந்தை லாபத்தை ஒப்பிட்டு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்ய பரிந்துரைத்ததுள்ளது. இதோடு சிறிய அளவு கூடுதல் விகிதம் (spread) சேர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
உதாரணமாக 5 ஆண்டு அஞ்சல் வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 5 ஆண்டு ஜி-செக் பத்திர லாபத்துடன் கூடுதலாக 25 அடிப்படை புள்ளிகள் சேர்க்கப்பட வேண்டும்.

தற்போதைய ஜி-செக் லாபம் என்ன?
PPF போன்ற நீண்டகால திட்டங்களுக்கு 10 ஆண்டு ஜி-செக் லாபம் அடிப்படையாகும். செப்டம்பர் 29 முதல் டிசம்பர் 29, 2025 வரையிலான காலக்கட்டத்தில் 10 ஆண்டு அரசு பத்திரத்தின் சராசரி லாபம் 6.54 சதவீதமாக உள்ளது.
இந்த நிலையில் ஷ்யாமளா கோபிநாத் குழு பரிந்துரையின் கூடுதல் 25 அடிப்படை புள்ளிகள் சேர்த்தால் பிபிஎஃப் திட்டத்திற்கான வட்டி விகிதம் சுமார் 6.79 சதவீதமாக வர வேண்டும். தற்போது பிபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும் காரணத்தால் வட்டி குறைப்பு வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதேபோல் மத்திய அரசு சந்தை நிலவரத்தை விட கூடுதலாக வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் போது ஷ்யாமளா கோபிநாத் குழு பரிந்துரையை கட்டாயம் பாலோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பல முறை சந்தை நிலவரத்தை காட்டினாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வட்டியை மாற்றாமல் வைத்துள்ளது மத்திய அரசு. எனவே இம்முறையும் வட்டி விகிதங்களை தற்போதைய அளவில் தொடரவும் வாய்ப்புள்ளது.

கடைசி மாற்றம் எப்போது
அஞ்சல் சிறு சேமிப்பு திட்ட விகிதங்கள் கடைசியாக ஏப்ரல் 2024இல் மாற்றப்பட்டன. அப்போது 3 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
டிசம்பர் 31 மறுஆய்வு முடிவுகள் நாட்டின் பல கோடி முதலீட்டாளர்களை பாதிக்கும் என்பதால் மக்கள் மத்தியில் இதுதொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications