பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SSCS ), போன்ற சிறு சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு அரசாங்கம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் (காலாண்டு) ஒரு முறை வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கு வழங்கப்படவுள்ள வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
ஜூன் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டின் வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்தக் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தது. அதாவது சிறுசேமிப்பு திட்டங்களில் தற்போது வழங்கப்படும் விகிதங்கள் இந்த காலாண்டிலும் தொடரும்.

2024-2025 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே இருக்கும். அதாவது ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், ஏப்ரல் 1, 2024 முதல் ஜூன் 30, 2024 வரை அறிவிக்கப்பட்ட விகிதங்களிலிருந்து மாற்றமின்றி இருக்கும், என்று நிதி அமைச்சகம் ஜூன் 28, 2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜூலை 2024 முதல் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம்:
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய சேமிப்பு சான்றிதழ், அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டம் (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றிற்கான வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
1 ஆண்டு டைம் டெபாசிட் - 6.9%
2 ஆண்டு டைம் டெபாசிட் - 7%
3 ஆண்டு டைம் டெபாசிட் - 7.1%
5 ஆண்டு டைம் டெபாசிட் - 7.5%
5 ஆண்டு தொடர் வைப்பு நிதி திட்டம் (RD) - 6.7%
மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%
தேசிய சேமிப்புச் சான்றிதழ் - 7.7%
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) - 7.1%
கிசான் விகாஸ் பத்ரா - 7.5% (115 மாதங்களில் முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு)
சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) - 8.2%
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 8.2%
அதாவது சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்குகள் அதிக வட்டி விகிதங்களைப் பெறுகின்றன.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!



Click it and Unblock the Notifications