புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்களா நீங்கள்.. உங்கள் குழந்தை நலனுக்கு சேமிக்க ஸ்மார்ட் ஐடியாஸ்!

சென்னை: அனைத்து அற்புதமான தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! தாய்மை என்பது ஒரு அற்புதமான உணர்வு. நீங்கள் குழந்தைப் பெற்ற நியூ மாம் எனில், உங்கள் குழந்தையுடன், உங்களுக்கான சில பொறுப்புகளும் சேர்ந்து தான் உலகிற்கு வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவில் உங்கள் குழந்தைகளுக்காக, நிதி நிர்வகிப்பதற்கான ஸ்மார்ட் ஐடியாக்களைப் பற்றிப் பார்ப்போம்.

நம் சமூகத்தில் இன்றளவும். பெரும்பாலான பெண்கள் குடும்பத்தைப் பேணுவதற்கும், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் மத்தியில் தங்களுக்கும். தங்கள் குழந்தைகளுக்கும் தேவைப்படும் நிதி திட்டமிடலைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டு விடுகின்றனர். ஆனால் நீண்ட கால நிதி இலக்குகளை, அடைவதற்கு தாய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. இதனை அவர் தனது குழந்தையின் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்களா நீங்கள்.. உங்கள் குழந்தை நலனுக்கு சேமிக்க ஸ்மார்ட் ஐடியாஸ்!

குடும்பங்களில் மற்றவர்களுக்கு சமைப்பது, இதர வேலைகளைப் பார்ப்பது குழந்தைகளை பார்த்துக் கொள்வது மற்றும் அன்றாடச் செலவுகளை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும் புதிதாய் குழந்தைப் பெற்றெடுத்த அம்மாக்களுக்குப் பொறுப்பு இருக்கிறது.

குடும்ப வருமானத்தில் 50 சதவீதத்தை முதலீட்டிற்காக ஒதுக்குதல்: குழந்தை பெற்றெடுத்த பின் மாதம் நீங்கள் செலுத்தும் பில்களை விட, சற்று அதிகமானத் தொகையை செலவிட வேண்டி இருக்கும். அது மருத்துவம், குழந்தை பராமரிப்பு, வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தால், குழந்தை பராமரிப்பாளரை பணிக்கமற்றினால் அவருக்கு உரிய சம்பளம், வீட்டு வாடகை என பல செலவுகள் இருக்கும். இவை இருந்த போதிலும் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளையின் உயர்கல்வி மற்றும் உங்களின் ஓய்வுக்குப் பிறகு உள்ள நாட்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முக்கிய செலவுகளுக்காக ஒரு கார்ப்பஸை உருவாக்க முதலீடு முக்கியம்.

எனவே, உங்களுடைய தேவையற்ற செலவைக் குறைத்து எதிர்கால செலவுகளுக்காக முதலீடு செய்யவும். இதற்காக நீங்கள் PPF திட்டங்கள், பிக்சட் டெபாசிட்கள், ஆண் குழந்தையாக இருந்தால் பொன்மகன் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தையாக இருந்தால் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த முதலீட்டு திட்டங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

இதர வருமானங்கள் பற்றி ஆராய்தல்: இன்றெல்லாம் பெண்கள் தனித்து செயல்பட ஆரம்பித்து விட்டனர். ஒரு குடும்பத்திற்கு, ஒரு பெண் பட்டதாரியாவது இருக்கின்றனர். அந்தப் படிப்பை வைத்துக்கொண்டு ஃப்ரீலான்சிங் வேலைகள் அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் திறமை இருந்தால் அந்த வேலையை கூட வீட்டிலிருந்தே செய்யலாம்.

நீங்கள் கைத்தறி பொருட்கள் செய்வதில் ஆர்வமாக இருந்தால், உங்களுடைய உற்பத்தி பொருட்களையும் இன்ஸ்டாகிராமில் மார்க்கெட்டிங் செய்யலாம். தற்போது அனைவரும் பார்க்கும் ஒரு சோசியல் மீடியா பிளாட்பார்மாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இதன் மூலம் உங்களது பொருளைப் பலர் பார்க்கும்படி, நீங்கள் விற்பனை செய்யலாம். அதில் வரும் வருமானத்தை வைத்து, உங்கள் குழந்தையின் நலனுக்காக சேமிக்கலாம் மற்றும் சுதந்திரமாக நீங்கள் வாழ்வதற்கும் வழி வகுக்கும்.

பார்ட் டைம் வேலைகள்: நிதி பங்களிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் முழு நேர சம்பளத்திற்கு பணிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் புதிய குழந்தை பெற்ற அம்மாக்களாக இருந்தால் அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கலாம். எனவே, பகுதி நேர வேலை அல்லது வீட்டில் இருந்து வணிகம் செய்து சம்பாதிக்கும் வேலையைப் பற்றி யோசிக்கலாம்.

ஆயுள் காப்பீடு: நீங்கள் பெற்றோராக ஆனவுடன் உங்கள் குழந்தைக்காக ஆயுள் காப்பீடு செய்வது முக்கியமாகும். இதன் மூலம் உங்கள் குழந்தைகள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். குழந்தைகளின் நிதி நலனை பாதுகாக்க விரும்பினால் ஆயுள் காப்பீட்டை ஒரு பாதுகாப்பு திட்டமாக பார்க்க வேண்டும்.

இது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமானத்துடன் கூடிய முதலீட்டு விருப்பமாக இருக்காது. எனினும் நீங்கள் வெளியூரில் வேலை செய்யும் பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைக்கு உதவும் வகையில் ஒரு ஆயுள் காப்பீட்டைப் பெற வேண்டும் இது அவசர காலங்களில் உங்கள் குடும்பத்திற்கு எந்த நிதி இழப்புகளும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+