பெரும்பாலான மக்கள் வீடு வாங்க லோன் பெறுகின்றனர். அதற்கு கடன் தொகைக்கு ஈடாக வட்டியும் செலுத்துகின்றனர். ஆனால் உங்கள் வீட்டுக் கடனை வட்டியே இல்லாததாக மாற்ற ஒரு சிறந்த வழி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளரான நேஹா நகர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு எளிமையான அணுகுமுறையை பகிர்ந்துள்ளார்.
முதலீடு மற்றும் நிதி திட்டமிடல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நேஹா நகர் உதவி கொண்டிருக்கிறார். 2022-ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களின் பட்டியலில் இவரும் ஒருவர். இவர் வீட்டுக் கடனை எளிதில் அடைக்கக் கூடிய ஒரு யுக்தியைப் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பதிவில் அது குறித்து பார்ப்போம். இதை பயன்படுத்துவதனால் உங்களுடைய வீட்டுக் கடனை முழுவதுமாக வட்டி இல்லாததாக மாற்ற முடியும்.

வீட்டுக்கடன் பெறுவதற்கு என்னவோ எளிதாகத் தோன்றலாம். ஆனால் கடன் காலம் முழுவதும் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தால் வட்டியையும் அசலையும் பார்க்கும்போது இரண்டுமே சமமாக இருக்கும். அதாவது நீங்கள் பெற்ற கடன் தொகைக்கு சமமாக வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நீங்கள் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்குகிறீர்கள்.. அதற்கு ரூ.10 லட்சம் முன் பணம் செலுத்தி விட்டீர்கள். தற்போது மீதமுள்ள ரூ.40 லட்சத்திற்கு லோன் பெறுகிறீர்கள். இதன் கடன் காலம் 20 ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம். 8.5 சதவீத வட்டியில் மாதா மாதம் ஈஎம்ஐ தொகையாக ரூ.34,700 செலுத்தி வருகிறீர்கள். இந்த 20 ஆண்டுகளில் நீங்கள் வங்கிக்கு செலுத்தும் மொத்த வட்டி மட்டும் ரூ. 43.31 லட்சமாக இருக்கும்.
கிட்டத்தட்ட நீங்கள் பெற்ற கடனை விட வட்டி சற்று அதிகம். வீட்டு கடனுக்கு ரூ.50 லட்சம் செலுத்துவதற்கு பதிலாக கடன் பெறுபவர் ரூ.93.31 லட்சம் பணத்தை வங்கிக்கு செலுத்த வேண்டி வரலாம். இது அசல் தொகையை விட சுமார் 2 மடங்கு அதிகம். பெரும்பாலான மக்கள் இதை உணர்வதே இல்லை.
ஆனால் ஈஎம்ஐ செலுத்துவதற்கு பதிலாக SIP திட்டங்களில் நீங்கள் செலுத்தும் லோன் தொகையில் 0.15 சதவீதம் முதலீடு செய்தாலே போதும். அதாவது 0.15 சதவீதம் என்பது ரூ.6,000.
ரூ.6,000 ரூபாயை மாதா மாதம் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் கழித்து ரூ.14 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீத வருமானம் கிடைத்தால் உங்களுடைய முதலீடு ரூ.79 லட்சமாக மாறியிருக்கும். ஆக ரூ.79 லட்சத்திலிருந்து நீங்கள் செய்த முதலீட்டை கழித்து விட்டு பார்த்தால் ரூ.65 லட்சம். இதில் ரூ. 43 லட்சம் நீங்கள் செலுத்தும் கடனுக்கான வட்டியாக வைத்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள ரூ.22 லட்சம் உங்களுக்கு லாபம். எனவே எஸ்ஐபி திட்டங்களில் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தியே உங்களுடைய வங்கிக்கு வட்டி செலுத்தலாம். வீட்டு கடனின் வட்டி விகிதங்கள் செலுத்தி முடித்த பின் அதிகமாக தோன்றும். எனவே கடனை திருப்பி செலுத்திக்கொண்டே இருக்காமல் வேறு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வட்டியையும் செலுத்தி, லாபத்தையும் பார்க்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications