வீடு அல்லது நிலம் வாங்க பட்ஜெட் இல்லாதவர்கள் ஹோம் லோன்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். நீங்கள் லோன் வாங்கியிருந்தால், உங்களுக்கு கடன் வழங்கிய வழங்குனர் ஒரு காலக்கெடுவை வழங்கியிருப்பார். எனவே அதைப் பொறுத்து மாதம் மாதம் EMI செலுத்தியாக வேண்டும். ஆனால் லோன் வாங்கும் சூழலில் லோன் ஃப்ரீ பேமெண்ட் என்ற ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது உங்களுடைய லோன் செலுத்தும் காலத்தை குறைக்க உதவுகிறது. இந்த பதிவில் லோன் ப்ரீபேமெண்ட் செலுத்துவதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
லோன் ப்ரீபேமெண்ட் என்றால் என்ன?: லோன் ப்ரீபேமெண்ட் என்பது கடன் காலத்திற்கு முன்பே பகுதி அளவு அல்லது முழுமையாக பணத்தை செலுத்தி கடனை முடிக்கும் விருப்பமாகும். இதன் மூலம் கடன் பெறுபவர்கள் காலப்போக்கில் செலுத்த வேண்டிய வட்டியை சேமிக்க முடியும்.

கடன் வாங்குபவர்கள் எப்போது ஃப்ரீ பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்த முடியும்?: பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை லாக்கின் காலத்தை கொண்டுள்ளன. அந்த காலத்திற்குள் உங்களால் ப்ரீ பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி லோனை அடைக்க முடியாது. எனவே நீங்கள் கடன் பெற்ற நிறுவனத்தில் என்ன விதிமுறை பின்பற்றப்படுகிறது? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் படிப்படியாக கடனை கட்டி முடிக்கலாம்.
எப்படி ப்ரீபேமெண்ட் செலுத்தலாம்?: ப்ரீபேமெண்ட் செலுத்த பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அவை என்னன்ன என்பது குறித்து பார்ப்போம்.
மொத்த தொகை: உங்கள் கடனின் அசலை குறைக்க ஒரே நேரத்தில் மொத்தத் தொகையாக வரவு வைக்கலாம்.
பிரித்து பிரித்து செலுத்துதல்: ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என பிரித்து பிரித்து தொகையை அவ்வப்போது வரவு வைக்கலாம்.
கூடுதல் EMI-கள்: உங்கள் கடனின் இருப்பை விரைவாக குறைக்க ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 கூடுதல் EMI-களை செலுத்தலாம்.
அதிகரித்த EMI தொகை: ஒவ்வொரு ஆண்டும் அதிக EMI தொகையை தேர்ந்தெடுப்பது தவணைக்காலம் மற்றும் வட்டி ஆகியவற்றை குறைக்க உதவும்.
ப்ரீ பேமெண்ட் செலுத்துவதால் என்ன பலன்?: நீங்கள் 30 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி விகிதத்தில் 85 லட்ச ரூபாய் லோன் வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு மாதம் மாதம் EMI-யாக 71,473 ரூபாய் செலுத்துகிறீர்கள் என்றால் 30 வருட கால முடிவில் வட்டியாக 1,72,30,139 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். அதுவே பிரீ பேமென்ட் ஆப்ஷன் பயன்படுத்தினால் வட்டி தொகையை வெகுவாகக் குறைக்க முடியும்.
பிரீ பேமென்ட் ஆப்ஷனை பயன்படுத்தினால் 58,75,158 ரூபாய் வரை வட்டி சேமிக்க முடியும். அதோடு உங்களுடைய 30 ஆண்டுகால கடன் செலுத்தும் வரம்பு 7 ஆண்டுகள் 10 மாதமாக குறைக்கலாம். அதாவது பிரீ பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி வருடத்திற்கு 10 சதவீதம்.. ரூ. 85 லட்சத்தில் 10%, 8.5 லட்சத்தை மூன்று தவணைகளாக ஒவ்வொரு வருடமும் செலுத்தி வர இஎம்ஐ தொகை ரூ.64,109 ரூபாயாக குறையும். இதனால் வட்டியையும் சேமித்து உங்களுடைய கடன் காலத்தையும் தோராயமாக 8 ஆண்டுகள் வரை குறைக்க முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications