நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 45 நாட்கள் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 41% வீழ்ச்சி கண்டுள்ளது.
எனினும் இந்த ஆண்டின் கடைசி இரு காலாண்டுகளில் இது புத்துயிர் பெற வாய்ப்புள்ளதாக சிஎம்ஆரின் இந்தியா மொபைல் ஹேண்ட்செட் சந்தை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வீழ்ச்சி
இந்த ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கிகளிப்பினை வழங்கிய ரெட்மி 8ஏ டூயல், ரெட்மி 8 மற்றும் ரெட்மி நோட் 8 வழங்கியுள்ளன. அதிக பங்கினை கொண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தலைவராக ரெட்மி இருந்தது. இதையடுத்து ஜியோமி 30% பங்கினை வகித்துள்ளது.
சாம்சங் விற்பனை அதிகரிப்பு
இதே தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் 24% பங்கினை கொண்டுள்ளது. இது கடந்த காலாண்டை விட 8% அதிகமாகும். சாம்சங்கினை பொறுத்த வரையில் சாம்சங் கேலக்ஸி எம் 11, A21S and A31 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் 50% பங்கு வகித்தன. எனினும் சீன பிராண்டான விவோவின் சந்தை சற்றே குறைந்து 17% ஆகியுள்ளது. இது Y19 மற்றும் Y91i, புதிய அறிமுகமான Y50 ஆகியவை அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 55% பங்களித்துள்ளன.
சீன நிறுவனங்கள் வீழ்ச்சி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ரியல்மி இந்திய பங்கு சந்தையில் நுழைந்ததில் இருந்தே தற்போது தான் 2 சதவீத சரிவினைக் கண்டுள்ளது. ஒப்போவும் அதன் சந்தையில் 3% இழந்துள்ளது. இதே போல் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சற்று பின்னடவை சந்தித்துள்ளன. சொல்லப்போனால் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டன.
களைகட்டிய ஆன்லைன் விற்பனை
ஒரு புறம் லாக்டவுன் காரணமாக ஆலைகளை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தன. இதே மறுபுறம் ஆலைகள் திறக்கப்பட்டாலும், போதிய உதிரி பாகங்கள் கிடைக்காமையால் உற்பத்தி செய்ய முடியாமல் தவித்தன. அப்படியே இது எல்லாவற்றையும் மீறி ஏற்றுமதி செய்வதிலும் பிரச்சனைகள் நீடித்தன. எனினும் லாக்டவுன் சமயத்தில் இந்தியாவில் சில்லறை வர்த்தக கடைகள் இல்லாததன் காரணமாக, ஆன்லைன் விற்பனை களைகட்டியது என்றே கூறலாம்.
மூன்றாவது காலாண்டில் விற்பனை அதிகரிக்கலாம்
எனினும் இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் முதல் நான்கு பிராண்டுகளில் 4 சீனாவுடையது தான். வரவிருக்கும் மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிக்கலாம், ஏனெனில் வரவிரும் பண்டிகைகால விற்பனையாவது கைகொடுக்கும் என்பது நிறுவனங்களின் நம்பிக்கை. பொறுத்திருந்து தான் பார்ப்போமே. இந்த கொரோனா எந்தளவுக்கு கைகொடுக்கிறது என்று.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications