டெல்லி:சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தியானது இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது 10 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது முதல் முறையாக இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
இது கடந்த 2022 - 23ம் ஆண்டில் 90,000 கோடி ரூபாய் அல்லது 11.2 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு முதல் முறையாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டினை காட்டிலும் 100% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த ஏற்றுமதி வளர்ச்சியில் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகள் முன்னிலையில் உள்ளன.
இந்த வளர்ச்சியானது மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் (PLI) மூலம் ஸ்மார்ட்போன் உற்பத்தியானது அதிகரித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாட்டை சேர்ந்த ஜியோமி, ஓப்போ, விவோ, ரியல் மி, ஓன்பிளஸ் போன்ற பிராண்டுகள், இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 75% பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்தினாலும், பிரபலமான நிறுவனங்கள் இந்தியாவின் ஏற்றுமதி பட்டியலில் உள்ளது.
இந்திய அரசு சீன நிறுவனங்களையும் ஏற்றுமதியினை அதிகரிக்க கூறினாலும், ஏற்றுமதியில் மற்ற நாட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகின் மொபைல் சாதன சந்தையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இது இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது என மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது குறித்து ICEA தரவின் படி, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது 2023ம் நிதியாண்டில் ஏற்றுமதி இலக்கானது 75,000 கோடி ரூபாயாகும். இதே 2022ம் நிதியாண்டில் 45,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஏற்றுமதி விகிதமானது ஆப்பிள் ஏற்றுமதிக்கு பிறகு உந்துதலை அளித்துள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் அதன் உற்பத்தியாளர்களான பாக்ஸ்காம், விஸ்ட்ரான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்களை விரிவாக்கம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் மூலம் முதலீட்டினை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியானது கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியானது அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இதன் மொத்த பங்கு கிட்டத்தட்ட 50% அல்லது 5.5 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை போன் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த சாம்சங், இந்தியாவில் இருந்து 4 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு ஏற்றுமதியினை அனுப்பியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications